ரீ ரிலீஸில் மாஸ் காட்டிய 5 படங்கள்.. நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்ன்னு தனுஷ், சிம்புவை ஓரங்கட்டிய விஜய்

5 Films Shown by Mass in Re-Release: சிறந்த படைப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்து உள்ளது தான் இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம்.  

தலைவர்களை நேசிக்கும் வெறித்தனமான ரசிகர்கள் தங்களது விருப்ப நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது எப்படி கொண்டாடுவார்களோ, அதே அளவு கொண்டாட்டத்தை ரீ  ரீலிசின் போதும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ரீ ரிலீஸ் செய்து வசூல் சாதனை படைத்த ஐந்து படங்கள் இதோ,

3: அரும்பு மீசையுடன் காதலை வெளிப்படுத்தும் நாயகனின் காதலையும் அவனுக்குரிய உடல்நிலை பிரச்சனைகளையும் ஒருசேர கூறி வித்தியாசமான திரைக்கதையுடன் அமைந்த படம் தான் தனுஷின் 3,  

2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. படத்திற்கு பலமே இதன் பாடல்கள் தான், ரீ ரிலீஸின் போது அனைத்து ரசிகர்களும் ஒன்றாக சேர்ந்து பாடி, வைப் செய்து கொண்டாடினர்.

விண்ணை தாண்டி வருவாயா: 11 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயே திரைப்படம் ஒரு தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட 750 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஏ ஆர் ரகுமானின் இசையில் சிம்பு, திரிஷா நடித்து வெளியான திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இன்றைய தலைமுறையினர் தியேட்டரில் ஒரு மினி கான்செட்டை உண்டாக்கி, பாடல் திரையிடும்போது அதை கொண்டாடி ஆர்ப்பரித்து வருகின்றனர்.

வாரணம் ஆயிரம்: 2008 ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். 

தமிழ்நாடு மட்டும் இன்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களிலும் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் முதல் முறை பார்ப்பது போல் பிரம்மாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

வசூல் சாதனை நிகழ்த்தும் கில்லி

பில்லா: ரஜினி நடித்த பில்லா திரைப்படத்தை 2007 ஆம் ஆண்டு ரீமேக் செய்திருந்தார் விஷ்ணுவரதன். யுவனின் இசையில் தரமான கேங்ஸ்டர் திரைப்படமாக தெறிக்க விட்டது அஜித்தின் பில்லா. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ரீ ரிலீஸ் ஆகி வசூலில் சக்கை போடு போட்டது.

கில்லி: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை ரீ ரீலீஸ் செய்தனர். தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 600 திரையரங்குக்கு மேல் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி வசூலில் மாபெரும் சாதனை செய்தது.

இதற்கு முந்தைய ரீ ரிலீஸ் படங்கள் ஆன “3” ,விண்ணைத்தாண்டி வருவாயா என அனைத்து படங்களின் வசூல் சாதனையை உடைத்து வசூல் மன்னனாக மீண்டும் தன்னை நிரூபித்து உள்ளார் தளபதி. 

திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், ரீ ரிலீஸ் ஆகி மூன்று நாட்களில், அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்