தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

Actor Sarathkumar Produced Movies: சினிமாவைப் பொறுத்தவரை எல்லோருக்கும் ஏறுமுகமாக தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில் சரத்குமார் ஹீரோவாக ஜொலித்திருந்தாலும், இதே வைத்துக் கொண்டு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இறங்கினார். ஆனால் இது இவருக்கு கை கொடுக்காமல் இவர் எடுத்த அனைத்து படங்களும் பெய்லியர் ஆனது.  அப்படி இவர் தயாரிப்பில் வெளிவந்த தோல்வியான படங்களை பார்க்கலாம்.

கண் சிமிட்டும் நேரம்: இப்படத்தில் தான் கலைவாணன் கண்ணதாசன் இயக்குனராக அறிமுகமானார். 1988 ஆம் ஆண்டு கண் சிமிட்டும் நேரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், அம்பிகா, சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் தான் சரத்குமார் தமிழில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்தையே தயாரிக்கவும் செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வெற்றி அடையவில்லை.

Also read: சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

ஜித்தன்: வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ஜித்தன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜித்தன் ரமேஷ், பூஜா, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ராடன் மீடியா தயாரித்து வெளியிட்டது. இதில் சரத்குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படம் ஒரு சோகமான காதல் கதையை முன்வைத்து இருக்கும். இப்படத்தின் கதை மக்களுக்கு பிடிக்காததால் சராசரியான விமர்சனத்தை பெற்றது.

தலை மகன்: 2006 ஆம் ஆண்டு தலைமகன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை சரத்குமார் இயக்கி தயாரித்திருக்கிறார். இதில் சரத்குமார், நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தான் சரத்குமார் இயக்குனராக அறிமுகமானார். இது இவருக்கு 100வது திரைப்படம். ஆனால் இப்படம் கலையான விமர்சனங்களை பெற்று நஷ்டத்தை கொடுத்த படமாக இருந்தது.

Also read: மொத்த நெருப்பையும் பற்ற வைத்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் சகுனியாய் மாறிய சுப்ரீம் ஸ்டார்

புலிவால்: இயக்குனர் மாரிமுத்து இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு புலிவால் திரைப்படம் வெளிவந்தது. இதில் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரு துருவங்களாக இருக்கும் இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் வெற்றி பெறாமல் தோல்வி படமாக அமைந்தது. அதனால் இப்படத்தை தயாரித்த சரத்குமார் பணரீதியான சரிவை எதிர்கொண்டார்.

ஜக்குபாய்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ஜக்குபாய் திரைப்படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், ஸ்ரேயா, கிரண், கவுண்டமணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இந்திய காவல் துறை அதிகாரியின் பயணத்தை முன்னிறுத்தி காட்டிய படமாக வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. அத்துடன் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை தழுவியது.

இப்படி சரத்குமார் மொத்தம் 11 படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. இதனால் அதிக அளவில் நஷ்டமடைந்து பல பிரச்சனைகளை சந்தித்து மோசமான நிலைமைக்கு ஆளானார்.

Also read: சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்