jappan

ராக்கெட் ராஜாவை விட டபுள் மடங்கு சேட்டை செய்யும் கார்த்தி.. ட்ரெண்டிங் ஆகும் ஜப்பான் பட டீசர்

Jappan Movie Teaser: கார்த்தி நடிக்கும் படங்கள் பொதுவாகவே வித்தியாசமான கேரக்டரிலும், ஜாலியான ஒரு படத்திலும் நடிக்கக் கூடியவர். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் அனைத்தும் மக்களை சரியான விதத்தில் என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அப்படித்தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவனாக பொண்ணுங்களிடம் சேட்டை பண்ணிக்கொண்டு ஜாலியான ஒரு கேரக்டராக நடித்திருப்பார்.

அதே மாதிரி தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் உடம்பு முழுவதும் தகதகவென மின்னுகிற மாதிரி சட்டையை போட்டுக்கிட்டு பற்களில் ஒரு தங்க பல்லை வைத்துக்கொண்டு பார்க்கவே காமெடி பீஸ் ஆக தெரிகிறது. இப்படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்குகளில் வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு நகைக்கடையில் 200 கோடி நகை திருட்டுப் போனதை ஒட்டி உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகை கடையின் சுவற்றில் ஒரு ஓட்டையை போட்டு 200 கோடி நகையே ஆட்டைய போட்டு வெளிநாடுகளுக்கு உல்லாசமாக சென்று ராஜா வாழ்க்கை வாழும் கேரக்டரில் அலைகிறார்.

இதனால் திருட்டு போன நகையை கண்டுபிடிக்கும் விதத்தில் போலீசார் இவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிக்கொண்டு எப்படி கார்த்தி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார் என்பதும், எதனால் நகை திருடுகிறார் என்பதையும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் வரும் டயலாக், எத்தனை குண்டு போட்டாலும் ஜப்பானை யாரும் அழிக்க முடியாது என்று சொல்லும் வசனம் ரொம்பவே ஹைலைட்டாக இருக்கிறது. அத்துடன் டார்க் காமெடி மூவியாக எடுக்கப்பட்டு அனைவரையும் என்டர்டைன்மென்ட் பண்ணப் போகிறது. இப்படமும் வழக்கம் போல் கார்த்திக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் கார்த்திக் நடிப்பு மற்ற படங்களை விட தூக்கலாகவே இருப்பது போல் தெரிகிறது. மேலும் இப்படத்தில் அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், ஜித்தன் ரமேஷ், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தயாரித்தவர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ். கண்டிப்பாக இந்த வருட தீபாவளி ஜப்பான் படத்துடன் சரவெடியாக இருக்கப் போகிறது.

kgf

நம்பி மோசம் போன ஆறு வெற்றி படங்களில் பார்ட் 2.. மிரளவைத்த கேஜிஎப் படத்தின் பரிதாபம்

இரண்டாம் பாகமாக வெளிவந்த ஆறு படங்கள் எதிர்பார்த்து அளவிற்கு மக்களிடம் நிற்கவில்லை.

Kamal-Kalyanaraman

மொக்கை வாங்கி, டெபாசிட் இழந்த ஆறு பார்ட் 2 படங்கள்.. பார்க்கவே முடியாமல் தலைவலி ஏற்படுத்திய கமல்

மக்களிடையே போதிய விமர்சனங்களை பெறாமல், கமல் படம் படும் தோல்வியை சந்தித்தது.

sarathkumar

தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

சரத்குமார் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

Kadharbasha

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவர இருக்கும் 4 படங்கள்.. திரையரங்குகளில் சோடைப் போன பாட்ஷா

திரையரங்குகளில் வெளியான கொஞ்ச நாட்களுக்கு பிறகு அந்தப் படத்தை ஓடிடி மூலமாக வெளியிட்டு வருகிறார்கள்.

karthi-suriya

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என நிரூபித்த 5 சகோதரர்கள்.. டில்லிக்கு டஃப் கொடுத்து வரும் ரோலக்ஸ்

தன் தனிப்பட்ட முயற்சியால் இவர்கள் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்கது.

farhana

ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா தேறுமா? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் ஃபர்ஹானா படத்தின் ட்விட்டர் ரிவ்யூ இதோ!

avan-ivan-vishal-arya-bala

அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன், தம்பி நடிகர்கள்.. பாலா சூழ்ச்சி தெரியாமல் காத்து கிடந்த சோகம்

பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன் தம்பிகளுக்கு நடந்த மோசம்.

வெற்றி படமே இல்லாததால் அகல கால் எடுத்து வைக்கும் ஜீவா.. அப்பாவை எதிர்த்து விபரீத முடிவு

ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.