மொத்த நெருப்பையும் பற்ற வைத்த சரத்குமார்.. செகண்ட் இன்னிங்ஸில் சகுனியாய் மாறிய சுப்ரீம் ஸ்டார்

Actor Sarathkumar: சரத்குமார் இப்போது செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். சத்யராஜ் எப்படி குணச்சித்திர பாத்திரங்களில் தனி முத்திரை பதித்தாரோ அப்படி சரத்குமாரும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. அதை தொடர்ந்து இவருக்கான வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் இவர் இல்லாமல் எந்த ஹீரோக்கள் படமும் வெளிவராது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

Also read: லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

அதன் காரணமாகவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப சரத்குமார் தற்போது தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விட்டாராம். இப்படி மறுப்பிரவேசத்தில் பிஸியாக இருக்கும் இவர் ஒரு பிரச்சனையின் ஆரம்ப புள்ளியாக மாறி இருப்பது தான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவர்தான் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார். அதை தொடர்ந்து ஆரம்பித்த பிரச்சனை சூப்பர் ஸ்டாரை தூண்டிவிடும் அளவுக்கு மாறியது. அதுதான் ஹுக்கும் பாடலிலும் வெளிப்பட்டது.

Also read: 42 வருடங்களுக்கு முன்பே மாடர்ன் ரொமான்டிக்காக நடித்த கமல்.. 100வது படத்தில் விழுந்த மரண அடி

இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்த போது விஜய் தரப்பில் இருந்தோ ரஜினி தரப்பில் இருந்தோ எந்த ஒரு அறிக்கையும் வராமல் இருந்தது. அதனாலயே பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்த வேளையில் ஜெயிலர் இரண்டாம் பாடல் மூலம் பிரளயமே வெடித்தது.

இது இப்போது சோசியல் மீடியாவில் பெரும் விவாதமாக பேசப்பட்டு வரும் நிலையில் சரத்குமார் தான் இதற்கு மூல காரணம் என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. அந்த வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் இவர் சகுனியாய் மாறி இந்த பிரச்சனைக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறார்.

Also read: லோகேஷை பார்த்தாவது திருந்துங்க.. பா ரஞ்சித், மாரி செல்வராஜுக்கு கிடைத்த சவுக்கடி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்