மயில்சாமி மரணமடைந்து பாதியிலே விட்டுட்டு போன 5 படங்கள்.. பேரிழப்பை சந்தித்த சந்தானத்தின் 80ஸ் பில்டப்

Actor Mayilsamy: ஒரு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தன்னார்வலராக சென்னையில் உள்ள வடபழனி, சாலிகிராமம் பகுதி மக்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை வாரி வழங்கியவர் தான் நடிகர் மயில்சாமி. கடந்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி திடீரென்று மரணமடைந்த மயில்சாமியை இன்று எல்லோரும் நினைவு கூறுகின்றனர். அது மட்டுமல்ல இவர் திடீரென மரணித்ததால் ஐந்து படங்களை பாதியிலேயே விட்டுட்டு போய்விட்டார். அந்தப் படங்களின் நிலைமை என்ன என்பதை பார்ப்போம். 

கோஷ்டி: இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் இன்ஸ்பெக்டராக காஜல் அகர்வால் நடித்த படம் தான் கோஷ்டி. இந்த படத்தில் பிரபல தாதாவாக நடித்த கேஎஸ் ரவிக்குமாரை கைது செய்ய முடியாமல் இருக்கும் காஜல் அகர்வாலை, இன்னொரு பக்கம் பேயாக இருந்து யோகி பாபு, ஜெகன், கிங்ஸ்லி ஆகியோர் அடிக்கடி பயமுறுத்துகின்றனர். இந்த படத்தில் ஹாஸ்பிடல் செக்யூரிட்டியாக நடித்த மயில்சாமி, ஊர்வசியுடன் செம ரகளை செய்தார். இந்த படம் முடிவதற்குள்ளையே மயில்சாமி மரணமடைந்ததால் அவருடைய ஒரு சில காட்சிகள் எடுக்க முடியாமல், ஏதேதோ டிங்கரிங் செய்து படத்தை வெளியிட்டனர். 

தமிழ் குடிமகன்: கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் எசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் மற்றும் ஸ்ரீ பிரியங்கா நடிப்பில் வெளியான படம் தான் தமிழ் குடிமகன். இதில் குலத்தொழில், ஜாதி இழிவு, சாதி ஒடுக்கு முறை  போன்றவற்றின் ஆதங்கத்தை இயக்குனர் கொட்டி தீர்த்தார். இதில் மயில்சாமி ஒரு வக்கீலாக வந்தார். இந்த படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் அவர் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இருப்பினும் அவருடைய காட்சிகளை எதையுமே நீக்காமல் அப்படியே படத்தில் வைத்து விட்டனர். 

80ஸ் பில்டப்: கடந்த நவம்பர் 24ம் தேதி சந்தானம் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம் தான் 80ஸ் பில்டப். இந்த படத்தில் சந்தானத்தின் கூட்டாளியாக காளி என்ற கேரக்டரில் மயில்சாமி நடித்தார். ஆனால் சந்தானத்துடன் சில காமெடி காட்சிகளில் மட்டுமே மயில்சாமியால் நடிக்க முடிந்தது. இவர்களுக்கிடையே இன்னும் நிறைய காமெடி காட்சிகள் இருந்திருக்கிறது. ஆனால் அதற்குள் மயில்சாமி இறந்துவிட்டார். இது அந்தப் படத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு தான். 

Also Read: பிப்ரவரி 23 வெளியாகும் 8 தமிழ் படங்கள்.. கடைசியாக மயில்சாமி நடித்த கிளாஸ்மேட்ஸ்

மயில்சாமியால் முழுசா நடிக்க முடியாமல் போன 5 படங்கள் 

கண்ணகி: பெண்களின் சமகால பிரச்சனைகளை அக்கறையுடன்  பேசிய படம் தான் கண்ணகி. இந்த படத்தில் ஷங்கர் ஐயா என்ற கேரக்டரில் அம்மு அபிராமியின் அப்பாவாக நடித்தார். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அப்பாவின் மனநிலைமையும் எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் மயில்சாமி அழகாக வெளிப்படுத்தினார். இந்த படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே மயில்சாமி இறந்தது தான் சோகம்.

சபாநாயகன்: அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சபாநாயகன் படத்தில் மயில்சாமி போலீஸ் ஆக வந்தார். இவரிடம் தான் அசோக் செல்வன் தன்னுடைய கல்லூரி பிளாஷ்பேக் கதையை சொல்வார். படம் முழுக்க அசோக் செல்வன் சொன்ன லவ் ஸ்டோரியை எல்லாம் சலிக்காமல் கேட்ட மயில்சாமி, இந்த படம் ரிலீஸ் ஆகும்போது சபாநாயகன் பட குழுவுடன் இல்லாமல் போய்விட்டார்.

Also Read: சமீபத்தில் இறந்த 5 நடிகர்கள் கடைசியாக நடித்த படங்கள்.. மகனுக்காக களம் இறங்கிய கேப்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்