வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்.. பல வருடங்களாக தண்ணி காட்டும் அயலான்

சினிமா துறையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தற்பொழுது டாப் நடிகர்களுள், ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மிகக் குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சருக்களை  சந்தித்துள்ளார். இருந்தாலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்துள்ளார். அப்படியாக இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் 5 படங்களை இங்கு காணலாம்.

மாவீரன்: இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயன் உடன் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் இப்படத்தின் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கிளப்பி உள்ளது.  

Also Read: சிவகார்த்திகேயனின் டெக்னிக்கை பாலோ செய்யும் கவின்.. அடுத்தடுத்து 100 கோடிக்கு போடும் திட்டம்

அயலான்: இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இதில் சிவகார்த்திகேயன் உடன் ரகுல் பிரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அதிலும் அறிவியல் தொழில்நுட்பத்தை சார்ந்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

எஸ்கே21: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.

Also Read: தோல்வி பயத்தை காட்டும் 2 ஹீரோக்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் !

வெங்கட் பிரபு : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி  அமைத்திருப்பது அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஹரீஷ் ஷங்கர் : தெலுங்கில் ஷாக், காப்பர் கிங் போன்ற ஹிட் படங்களை கொடுத்த, ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்  சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தோல்வி அடைந்தாலும் மார்க்கெட் மட்டும் குறையல.. இப்பவே 100 கோடிகளை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்

- Advertisement -

Trending News