யூடியூப் மூலம் 5 பேர் ஹீரோவாக நடிக்கப் போகும் படங்கள்.. வெங்கட் பிரபுவுடன் இர்ஃபான் செய்யப் போகும் சேட்டை

Youtubers Entry to Big Screen: ஒரு நேரத்தில் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. தற்போது திறமை நம்மிடம் இருந்தால் நம்மை தேடி வாய்ப்புகள் வந்து குவியும் என்பதற்கு ஏற்ப அனைவரும் சோசியல் மீடியா மூலம் பிரபலம் ஆகி வருகிறார்கள். அத்துடன் இவர்களிடம் இருக்கும் திறமைகளை பார்த்து ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி ஆட்களை தேர்வு செய்து பயன்படுத்தி கொள்கிறார்கள். அப்படி யூடியூப் மூலம் பிரபலமான ஐந்து பேரை தற்போது ஹீரோவாக பார்க்க போகிறோம்.

டிடிஎஃப் வாசன்: இயக்குனர் செல்அம் எழுதி இயக்கும் மஞ்சள் வீரன் படத்தில் இவர் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி ஆகியோர் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் பட்ஜெட் மொத்தமே 6 கோடியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இவருக்கு பிடித்தமான புல்லட்டில் இருந்து கொண்டு விலிங் செய்தபடி வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இர்ஃபான்: இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” படத்தில் ஆனந்த் ராம், பவானி ஸ்ரீ, இர்ஃபான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது. இவர் ஏற்கனவே யூட்யூபில் அனைத்து உணவுகளிலும் கண்டமேனிக்கு சாப்பிட்டு கண்ணா பின்னான்னு ரிவ்யூ கொடுப்பார். இவரை வைத்து வெங்கட் பிரபு தயாரிக்கிறார் என்றால் இரண்டு பேரும் ஏதோ மிகப்பெரிய ஆட்டத்தை ஆடப்போகிறார்கள் என்பது போல் தெரிகிறது. இப்படம் இந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவர உள்ளது.

Also read: டிடிஎஃப் வாசனுக்கு ஜோடி போட்டு வளர்வதற்கு முன்னரே வீணா போன ஹீரோயின்.. வாங்குன பெயர் எல்லாம் வீண்

மைக்செட் ஸ்ரீராம்: இயக்குனர் விவேக் இயக்கத்தில் மைக் செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும், நடிகை மானசா மற்றும் ரமி ஆகியோர் புது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சந்தானத்தின் மைத்துனர் ஆன தங்கராஜ் மற்றும் வினோத் துரைசாமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டிலும் அடுத்தடுத்து அப்டேட்டுகளும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மதன் கௌரி: நந்தா பெரியசாமி இயக்கத்தில் மதன் கௌரி நடிப்பில் தேடி தேடி பார்த்தேன் என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து செகண்ட் ஹீரோவாகவும் இன்னொரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். யூடியூப் மூலம் பிரபலமானவர் தற்போது நடிகராகவும் பயணத்தை தொடங்கி விட்டார்.

சுதாகர்: பரிதாபங்கள் சேனல் மூலம் கோபி மற்றும் சுதாகர் பலரையும் கலாய்த்து மீம்ஸ் ட்ரோல்ஸ் போட்டு ஃபேமஸ் ஆனார்கள். அதன் மூலம் பல படங்களில் ஹீரோக்கு நண்பராகவும், கல்லூரி மாணவராகவும் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, மீசைய முறுக்கு, சுவாமி போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து நண்பர் கேரக்டருக்கு பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

Also read: ஓவர் தலைக்கனத்தில் ஆடும் டிடிஎஃப் வாசன்.. அடுத்த ஸ்லீப்பிங் ஸ்டாருக்கு சொம்படிக்கும் திரையுலகம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்