ஓவர் தலைக்கனத்தில் ஆடும் டிடிஎஃப் வாசன்.. அடுத்த ஸ்லீப்பிங் ஸ்டாருக்கு சொம்படிக்கும் திரையுலகம்

TTF Vasan Movie: பொதுவாக இன்றைய இளைஞர்கள் யூடியூப் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்கள் பண்ணுவது எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று ஆசைதான். இதில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் பிரபலமான பல முன்னணி யூடியூபர்களுக்கு டிடிஎஃப் வாசனுக்கு சினிமாவை ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பலரும் இது வேண்டாம் யூட்யூபே போதும் என்று ஒதுங்கி இருக்கும் நிலையில் வாசன் தைரியமாக படத்தில் நடிக்க களமிறங்கி இருக்கிறார்.

படத்தின் இயக்குனரும் இப்போதைய தமிழ் சினிமாவுக்கு ரொம்ப ட்ரெண்டாக இருக்கும் ஒரு ஆள் தான் தேவை. அதனால் தான் வாசனை இந்த படத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவரை ஒரு வருடமாக நான் கவனித்து வருகிறேன் என்று பேசி இருக்கிறார். ஏற்கனவே யூடியூப் சேனல் நடத்தும் பொழுதே வாசன் தன்னை ஒரு பெரிய செலிபிரிட்டியாக தான் நினைத்துக் கொண்டிருந்தார். தற்போது ஹீரோ வாய்ப்பு கிடைத்தவுடன் இன்னும் அதிகம் ஹைப் ஆகியிருக்கிறார்.

Also Read:அஸ்வின் போல ஆணவத்தில் ஆடும் யூடியூபர்.. முதல் படத்திற்கு ஓவர் பில்டப் கொடுக்கும் மஞ்சள் வீரன்

படத்தின் பூஜை போடப்பட்ட முதல் நாளே வாசனிடம் மைக்கை கொடுத்து இஷ்டத்திற்கு பேச விட்டு, படக்குழு யோசிக்காமல் ஒரு விஷயத்தை செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நிறைய வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிகம் மீடியா முன் பேசாமல் உஷாராக இருப்பார்கள். ஆனால் வாசன் மைக் கிடைத்தது தான் போதும் என்று படத்திற்கு பில்டப் கொடுத்ததோடு தனக்கும் சேர்த்து பில்டப் கொடுத்து வசமாக சிக்கி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 249 கிலோமீட்டர் வேகத்தில் ஹெல்மெட் இல்லாமல் சென்று மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பிய இவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளனி அதைப்பற்றி பேசும் பொழுது அவரிடம் கோபமாக பேசி, தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். மேலும் படத்தின் 200 வது நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பேசுவோம் என்று சொல்லி வேறு ஓவர் அலப்பறை கூட்டி இருக்கிறார்.

Also Read:10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

சினிமாவை பொறுத்த வரைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் சட்டென பட வாய்ப்பு கிடைத்து விடும். ஆனால் அதில் பத்தில் ஒருத்தரே நிலைத்து நிற்பார்கள். தனக்கு அதிகமாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என நினைத்து மைக்கில் இஷ்டத்திற்கு பேசி மொத்த பட வாய்ப்புக்கும் குழி தோண்டியவர் தான் நடிகர் அஸ்வின். பட்டபின் தற்போது புத்தி தெளிந்து அடக்கி வாசிக்கிறார். வாசன் சினிமாவுக்கு புதுசு என்பதால் அதன் ஆழம் தெரியாமல் தன்னை ஒரு பெரிய ஹீரோவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் பூஜை தொடங்குவதற்கு முன்பே 200 நாள் கொண்டாட்டம், தொகுப்பாளினியிடம் கோபப்படுவது என சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடி வருகிறார் வாசன் . மேலும் தன்னுடைய பழைய வீடியோக்களினால் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று அதை நியாயப்படுத்தும் வகையிலும் பேசி நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

Also Read:இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்