கமலுடன் கைகோர்க்காத கோலிவுட்டின் 5 முக்கிய புள்ளிகள்.. கமல் கூப்பிட்டும் நோ சொன்ன மார்க் ஆண்டனி

Kamal Haasan: தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு கமலுடன் வேலை செய்வது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் கமல் படத்தில் சின்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பதற்கு நிறைய கலைஞர்கள் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் கோலிவுட்டில் முக்கிய புள்ளிகளாக இருந்த இந்த ஐந்து பேர் ஒருமுறை கூட கமலுடன் இணைந்து படம் பண்ணவில்லை.

கமலுடன் நடிக்காத ஐந்து நடிகர்கள்

ரகுவரன்: 90களின் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லனாக இருந்தவர் தான் நடிகர் ரகுவரன். கேரக்டருக்கு ஏத்த மாதிரி எல்லோரும் உருவ அமைப்பை மாற்றி பார்த்திருப்பீர்கள். ஆனால் ரகுவரன் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி குரலையே மாற்றக்கூடியவர். கமலின் மிகப்பெரிய ஹிட் படமான நாயகன் படத்தில் நாசர் கேரக்டர் ரகுவரன் நடித்திருக்க வேண்டிய ஒன்றுதான். ஆனால் அந்த கேரக்டரில் தனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என ரகுவரன் அதை ரிஜெக்ட் செய்து விட்டார். கமல் எவ்வளவோ பேசி பார்த்தும் ரகுவரன் அந்த படத்தில் நடிக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றாமல் இருந்து விட்டார்கள்.

விவேக்: நடிகர் கமலஹாசனின் படங்களை கவனித்துப் பார்த்தால் அவர் பெரும்பாலும் காமெடியில் உச்சத்தில் இருப்பவர்களை நடிக்க வைக்க மாட்டார். நகைச்சுவை காட்சிகளில் அவருடைய பங்கே அதிகமாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி கணேஷ், வையாபுரி, ரமேஷ் கண்ணா போன்றவர்களுக்கு தான் தன்னுடைய காமெடி படங்களில் வாய்ப்புகள் அதிகமாக கொடுப்பார். இதனால் தான் விவேக்குடன் கமல் இணைந்து பணியாற்றவே இல்லை. விவேக்கின் கடைசி ஆசையாக இந்தியன் 2 படத்தில் இருவரும் இணைந்து வேலை செய்து இருக்கிறார்கள்.

Also Read:பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்

ரோஜா: 90 களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து உழைப்பாளி படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் கமலுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை. இது பற்றி மீடியாவில் அவரிடம் கேட்ட பொழுது கமல் படங்களில் இருக்கும் அந்த முத்த காட்சியில் நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது. அதனால் தான் நான் கமல் பட வாய்ப்புகளை ஒத்துக் கொள்வதில்லை என்று தைரியமாக பதில் சொல்லி இருக்கிறார்.

நதியா: நடிகை நதியா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். தன்னுடைய கொள்கையை தளர்த்தி ராஜாதி ராஜா படத்தில் சூப்பர் ஸ்டார் உடன் அவர் கைகோர்த்தார். ஆனால் கமலஹாசன் கூட அவர் ஒரு படம் கூட நடிக்க ஒத்துக் கொள்ளவே இல்லை. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது கமல் படங்களில் வைக்கப்படும் முத்த காட்சி தான்.

கனகா: தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை அடைந்தவர் தான் கனகா. ரஜினிகாந்த், கார்த்திக், சரத்குமார் என அப்போதைய முன்னரே ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியாக நடித்தார் கனகா. ஆனால் உலக நாயகன் கமலஹாசன் உடன் மட்டும் இணைந்து அவர் பணிபுரியவே இல்லை. மற்ற ஹீரோயின்கள் சொல்லும் காரணம் போல கமலஹாசன் படத்தின் இருக்கும் முத்த காட்சிக்காகத்தான் அவர் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Also Read:வினோத்துடன் ஆன கூட்டணியை முறித்துக் கொண்ட கமல்.. மணிரத்தினத்தால் ஏற்பட்ட விளைவு

- Advertisement -spot_img

Trending News