புதன்கிழமை, நவம்பர் 13, 2024

ஏடாகூடமாக வெளிவந்த 5 கள்ளக்காதல் படங்கள்.. மாமனாருடன் தொடர்பில் இருந்த அமலா பால்

சினிமாவை பொருத்தவரையில் நம்ப முடியாத வகையில் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் சில திரைப்படங்கள் பெரும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஏடாகூடமான ஐந்து கள்ளக்காதல் திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

வாலி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் அஜித் அண்ணன், தம்பி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் அதில் காது மற்றும் வாய் பேச முடியாதவராக இருக்கும் அண்ணன் அஜித் சிம்ரன் மேல் காதலில் விழுவார். ஆனால் அதற்கு முன்பே சிம்ரன் அவருடைய தம்பியை காதலித்துக் கொண்டிருப்பார். இப்படியாக செல்லும் கதையில் தம்பி மனைவி என்றும் பாராமல் அஜித் சிம்ரனை அடைவதற்கு பல வேலைகள் செய்வார். இப்படி ஏடாகூடமாக வெளிவந்த இந்த திரைப்படம் சில சர்ச்சைகளை கிளப்பினாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Also read: பெண் ரசிகைகளால் அதிகமாக ரசிக்கப்பட்ட 5 நடிகர்கள்.. திருமணத்தால் ஹீரோவிலிருந்து ஜீரோவான பிரஷாந்த்

கலாபக் காதலன்: ஆர்யா, ரேணுகா மேனன் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. அதில் அக்கா கணவரான ஆர்யாவை வெறியோடு காதலிக்கும் கதாபாத்திரத்தில் அக்சயா நடித்திருப்பார். இப்படி முறையற்ற காதல் படமாக வெளிவந்த இப்படம் பல விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி: இயக்குனர் சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அமலாபால் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. இதில் அமலா பால் தன் மாமனார் உடன் முறையற்ற உறவில் இருப்பார். அதற்கேற்றவாறு அதில் காட்டப்பட்டிருந்த காட்சிகளும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இவ்வாறு வெளியான இந்த திரைப்படம் கடும் கண்டனத்திற்கு ஆளானது. இப்படி எல்லாம் படம் எடுக்கலாமா என்ற ரீதியில் பல பெண்கள் இப்பட இயக்குனரை திட்டி தீர்த்தனர். ஆனால் இப்படம் தான் அமலா பாலுக்கு இப்போது வரை ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது.

Also read: முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றைய காதலை வெளுத்து வாங்கிய லவ் டுடே

உயிர்: இயக்குனர் சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா நடிப்பில் இப்படம் வெளிவந்தது. அதில் சங்கீதா ஸ்ரீகாந்துக்கு அண்ணியாக நடித்திருப்பார். ஆனால் தன் புருஷனை விட எல்லாவிதத்திலும் ஒரு படி உயர்வாக இருக்கும் கொழுந்தன் ஸ்ரீகாந்த் மேல் சங்கீதா ஆசைப்படுவார். அதற்காக அவர் பல வில்லத்தனமான வேலைகளிலும் ஈடுபடுவார். இவ்வாறு வெளியான இந்த திரைப்படமும் கடும் சர்ச்சைகளை சந்தித்தது.

ஒரு குப்பை கதை: காளி ரங்கசாமி இயக்கத்தில் தினேஷ், மனிஷா யாதவ் நடிப்பில் இப்படம் வெளியானது. இதில் மனிஷா யாதவ் தன் அழகுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கும் கணவனை மிகவும் வெறுத்து ஒதுக்குவார். அதன் விளைவாக வேறு ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு கணவரை விட்டுவிட்டு சென்றுவிடுவார். இப்படி ஒரு கதை கருவுடன் வெளிவந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

Also read: நடிப்பில் கல்லா கட்ட முடியல, பிசினஸில் இறங்கிய 5 ஹீரோக்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் நடிக்க மறுத்த நெப்போலியன்

- Advertisement -spot_img

Trending News