முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றைய காதலை வெளுத்து வாங்கிய லவ் டுடே

பொதுவாக சினிமாவில் நடித்த உடனே அனைவரும் ஹீரோவாக முடியாது. ஆனால் சில நடிகர்கள் முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் நடித்து அந்தப் படங்களில் மூலம் இவர்கள் வெற்றியை பார்த்து வருகிறார்கள். அப்படி எதார்த்தத்துடன் நடித்த ஐந்து நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

கார்த்திக் : அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் முழுக்க முழுக்க மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் அறிமுகமான கார்த்திக் டைட்டில் கேரக்டராக நடித்தார். இதில் கார்த்திக் , பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். இதில் இவர் முரட்டுத்தனமான நடிப்பை யதார்த்தத்துடன் வெளிக்காட்டி நடித்திருப்பார். இவர் நடித்த முதல் படத்திலேயே பட்டய கிளப்பி இருப்பார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

Also read: கார்த்திக் இல்லாமல் உருவாகும் பையா-2.. பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்படும் லிங்குசாமி கூட்டணி

மாதவன்: மணிரத்தினம் இயக்கத்தில் 2000ஆம்  ஆண்டு காதல் திரைப்படமாக அலைபாயுதே வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் மாதவன் ஒரு ஹீரோவாக அங்கீகாரம் பெற்றார். இதில் மாதவனுக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். இதில் இவர் துருதுரு நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் ஷாலினியிடம் இவர் ப்ரொபோஸ் பண்ற விதம் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ரசிக்க கூடியதாக இருக்கிறது. இவர் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

தனுஷ்: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு டீனேஜ் கதையாக துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமானார். இதில் மற்ற புதுமுகங்களான அபினய்,ஷெரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இவர் நடித்த முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்து அதிக வரவேற்பை பெற்றார். இதில் மிகப்பெரிய பிளஸ் யுவன் சங்கர் ராஜா இசை. இந்தப் படத்தில் அதிக அளவில் ஹைப் ஏற்படுத்தியது இவருடைய இசை என்றே சொல்லலாம்.

Also read: தனுஷ் கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்த 5 படங்கள்.. வளரும் போதே வந்த சோதனை

விக்ரம் பிரபு : பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்தில் விக்ரம் பிரபு அறிமுகமானார். இதில் லட்சுமி மேனன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் நடிப்பு உண்மையாகவே ஒரு யானை பாகன் போலவே எதார்த்தமாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் மூலம் இவர் சினிமாவில் அதிகமான வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதன்: கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் கடந்த வருடம் லவ் டுடே படத்தை இயக்கி அதில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் இவர் மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார். இதில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி காதலை வித்தியாசமாக நடித்துக் காட்டி இருப்பார். இதன் மூலம் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை போல இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: காந்தாரா படத்தைக் காப்பியடித்த லவ் டுடே.. அக்கட தேசத்திலும் டஃப் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்