ஒத்த பைசா காசு வாங்காமல் நடித்துக் கொடுத்த 5 பிரபலங்கள்.. 2 வது காதல் முறிவுக்குப் பின் நயன் எடுத்த முடிவு

5 Celebrities Without Salary Acting : சினிமாவில் நடிக்கும் பிரபலங்கள் முதலில் அவர்களுடைய சம்பளத்தை கரராக பேசிவிட்ட பிறகு படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகுவார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் சில நடிகர்கள் ஒரு சில காரணங்களால் சம்பளமே வாங்காமல் நடிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அப்படி எந்த நடிகர்கள் என்ன படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜயகாந்த்: பொதுவாக இவருடைய கேரக்டரில் மிகச்சிறந்த ஒரு விஷயம் என்றால் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து விட்டால் முதல் ஆளாக வந்து நிற்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் எஸ்ஏ சந்திரசேகர் கேட்டதும் அவருக்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யின் அண்ணன் கேரக்டரில் வந்து நடித்துக் கொடுத்தார். அதற்கு காரணம் விஜய்யை அடுத்த கட்ட லெவலுக்கு பிரமோஷன் பண்ணி விட வேண்டும் என்பதற்காக அப்பொழுது மிக பிரபலமாக இருந்த விஜயகாந்த் ஒத்த பைசா வாங்காமல் நன்றி கடனுக்காக நடித்திருக்கிறார்.

மம்முட்டி: மலையாளத்தின் மெகா ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் மம்முட்டி 2018 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளிவந்த பேரன்பு திரைப்படத்தில் ஆன்லைன் டாக்ஸி டிரைவராக அமுதவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக இவர் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி இவரிடம் கேட்டதற்கு பணத்திற்காக எல்லா நேரமும் ஓட முடியாது. சில நேரங்களில் மனதிற்கு சரி என்று பட்டால் ஆத்ம திருப்தியுடன் செய்ய தூண்டும். அதுதான் எனக்கு இந்த கதையின் மூலம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதற்காக சம்பளத்தை வாங்கிக் கொள்ள மனசு ஏற்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Also read: வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!

ரஜினி: வசூல் ரீதியாகவும், உச்ச நட்சத்திரங்களில் முதலிடத்திலும் இருக்கக்கூடியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரன் படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த தமிழ் நடிகர்களில் முதல் நடிகர் இவராகத்தான் இருந்திருக்கிறார்.

சூர்யா: பொதுவாக இவருடைய முக்கிய நோக்கமே நடிக்கும் படங்கள் மூலம் கதை சிறப்பாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களை பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் ராக்கெட்ரி மற்றும் விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கேரக்டர்காக எந்தவித சம்பளமும் வாங்காமல் நட்பு ரீதியான பழக்கத்திற்கும், கதைக்காகவும் மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார்.

நயன்தாரா: பல காலகட்டங்களில் எத்தனையோ நடிகைகள் வரிசையாக வந்து கொண்டிருந்தாலும் நயன்தாராவுக்கு என்று தனி இடத்தை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவருக்கு சிம்புவுடன் ஏற்பட்ட காதலால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். அதன் பின் பிரபுதேவாவை காதலித்து லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். அடுத்து இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக மறுபடியும் சினிமாவிற்கு என்டரி கொடுத்தார். அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் உடன் ஆடினார். இதற்காக சம்பளம் என்று எதுவும் வாங்காமல் இவருடைய கேரியரில் அடுத்த கட்ட லெவலுக்காக ஆடிக் கொடுத்திருக்கிறார்.

Also read: ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்