வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!

Rajini 5 Movies Top Collections: நடிகர்களை பொருத்தவரை எத்தனையோ வெற்றி தோல்விகளை பார்த்திருந்தாலும் அவர்களுடைய விடாமுயற்சியால் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ரசிகர்கள் தான். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தவம் இருந்து காத்துக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு இடையில் அந்த படங்கள் நல்லா இருக்கோ, இல்லையோ ரஜினி நடித்து விட்டால் வசூல் அளவில் வெற்றி தான் என்பதற்கு ஏற்ப வசூல் ரீதியாக நான் தான் பெஸ்ட் என்று நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மூன்று தலைமுறைகளாக அனைத்து இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு முதலிடத்தில் இருக்கிறார். அப்படி ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களின் வசூல் சாதனையை தற்போது பார்க்கலாம்.

2.0: ஒரு மனுசன் செய்ற வேலையை ரோபோட் செய்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டிய படம் தான் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் 2.0. 2018 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உலகளவில் 10,000 மேல் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அத்துடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் உருவாகி அனைத்து பக்கமும் தலைவர் தெறிக்க விட்டிருப்பார். இதனாலையே இப்படம் 655 கோடியிலிருந்து 800 கோடி வரை வசூல் சாதனையை பெற்றது.

Also read: நான் நினைச்சா மட்டும் தான் நீ ஜெயிக்க முடியும்.. நட்டாற்றில் நிற்கும் ரஜினியின் வாரிசு

வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்

ஜெயிலர்: இந்த ஆண்டு வெளிவந்த படத்திலேயே ரஜினி நடித்த ஜெயிலர் படம் தான் அதிக வசூலை பெற்றிருக்கிறது. முக்கியமாக படம் ரிலீஸ் ஆகி ஒரே நாளில் 96 கோடி வரை வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் மொத்த வசூல் 650 கோடி வரை கல்லாகட்டி இருக்கிறது.

பேட்ட: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கதையுடன் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 160 கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் வசூல் அளவில் எப்போதுமே நான் டாப்பு தான் என்று சொல்லும் அளவிற்கு 240 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

கபாலி: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் கபாலி படம் வெளிவந்தது. கேங்ஸ்டர் கதையே வைத்து எடுக்கப்பட்டாலும் மனைவி குடும்பம் என்று நிம்மதியான வாழ்க்கையை தேடும் ஒரு கதையை மையப்படுத்தி இருக்கும். இப்படம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இருந்தாலும் வசூல் அளவில் 305 கோடி லாபத்தை பார்த்திருக்கிறது.

காலா: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 200 கோடி வசூல் சாதனையைப் பெற்று ரஜினியின் வசூல் ரீதியான வெற்றி படங்களில் ஒன்றாக இணைந்திருக்கிறது.

Also read: வேட்டையன் ரஜினி தூக்கி போட்ட ஐ கிளாஸ் எவ்வளவு தெரியுமா.? கிராபிக்ஸ் இல்லாமல் நடந்திருக்கிற மேஜிக்