சாமி படம் என்று போனால் சாக வேண்டியது தான்.. முகம் சுளிக்க வைத்த 5 மோசமான தமிழ் அடல்ட் படங்கள்

5 Adult Tamil movies that made people frown: பொருந்தா காதலுடன் தவறான நோக்கத்தை மையமாக வைத்து கொச்சையான இரட்டை அர்த்த வசனங்களுடன் வேண்டாத இச்சைகளை புகுத்தி இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று தப்பு கணக்கு போட்டு விடுகின்றனர் இயக்குனர்கள். நோக்கம் புரியாது, தெரியாமல் பார்த்த மக்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது இதுபோன்ற சில படங்கள்.

உயிர்: சாமி இயக்கத்தில் 2006 ஆண்டு வெளிவந்த உயிர் திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் சம்விர்தா நடித்துள்ளனர். கணவனை இழந்த பெண் கணவனின் தம்பியை அடைவது போன்ற கதையை நாசுக்காக கூட இல்லாமல் அப்பட்டமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை “சீ” சொல்ல வைத்திருந்தார் இயக்குனர்.

சிந்து சமவெளி: உயிர் பட இயக்குனர் சாமியின் இயக்கத்தில் 2010 வெளிவந்த மற்றும் ஒரு தரமான படைப்பு சிந்து சமவெளி என்றே சொல்லலாம். ஹரிஷ் கல்யாண்,அமலாபால் நடித்த இப்படத்தில் சற்று வித்தியாசமாக மாமனார், மருமகளை அடையும் கதையை கையில் எடுத்தார் இரண்டிலும்  முடிவு ஒன்றுதான் கொடூரமான மரணம்.

Also read: எம்ஜிஆர் சிவாஜி படத்துக்கு கிடைத்த A சர்டிபிகேட்.. முதன்முதலாக வாங்கிய 2 படங்கள்

90 ml : பிக் பாஸில் ஓவியாவிற்கு கிடைத்த புகழுக்கு பின் அதே தைரியத்துடன் நடித்த படம் தான் 90 எம் எல். வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட பெண்களை அவர்களின் மனதை அமைதிப்படுத்தும் நோக்கோடு புகை,குடி என எதுவுமே தப்பில்லை என்று பழக்கப்படுத்தும் தோழியாக இருந்தார் ரீட்டா என்கிற ஓவியா. படம் பார்க்கும் அனைவரையும் கடுப்பேத்தி வாய்க்கு வந்தபடி பேச வைத்து உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்களை புலம்ப வைத்திருந்தார் ஓவியா.

இருட்டு அறையில் முரட்டு குத்து: படத்தின்  தலைப்பிலிருந்து ஆரம்பித்து படம் முழுவதும் குமட்டும் படி வைத்திருந்தது. அடல்ட் ஹாரர் படமான இதில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்திருந்தனர். காதை கூசச் செய்யும் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசமான உடை என அனைத்தையும் கட்சிதமாய் செய்திருந்தார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். வெளிவந்த புதிதில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றபோதும் வசூலில் நல்ல லாபம் சம்பாதித்தது.

ஹர ஹர மஹாதேவகி: அடல்ட் படமான இந்த படத்தை ஹர ஹர மகாதேவகி என்ற விடுதியின் பெயரை வைத்து சாமி படமா, அடல்ட் படமா என ரசிகர்களை குழப்பி வைத்திருந்தனர்.  இந்த படத்தையும் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமாரே இயக்கினார் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்திருந்தனர். தேவையற்ற வசனங்களை தேவையுடன் உள் நுழைத்து பார்வையாளர்களை அருவருப்பு அடைய செய்தனர்.  யாராவது தலைப்பை பார்த்து சாமி படம் என்று நினைத்து உள்ளே சென்றால் அவர்களின் கதி அதோ கதி தான்.

Also read: 2023-ல் தியேட்டரை தெறித்துவிட்ட ஐந்து ‘A’ படங்கள்.. குருவை மிஞ்சிய லோகேஷின் சிஷ்யன்

- Advertisement -spot_img

Trending News