கணவனால் மன உளைச்சலுக்கு ஆளாகப்பட்ட 5 நடிகைகள்.. ரீ-என்ட்ரிக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய சாயிஷா

நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். அவ்வாறு காலம் கடந்த பின் கிடைக்கும் வாய்ப்பை ஏற்கும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

மேலும் திருமணத்திற்கு பிறகு கணவனின் முட்டுக்கட்டையை ஏற்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள். அவ்வாறு கணவனால் மன உளைச்சலுக்கு ஆளான 5 நடிகைகள் பற்றி இங்கு காணலாம்.

Also Read:உருகி உருகி நஸ்ரியாவை காதலித்தது இதனால் தான்.. 6 வருடங்கள் கழித்து பகத் பாசில் சொன்ன காரணம்!

நஸ்ரியா: இவர் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பெங்களூர் டேஸ் என்ற மலையாள படம் இவரின் வெற்றி படமாகும். அதன்பின் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். மேற்கொண்டு படங்களில் நடிக்காமல் பட தயாரிப்பில் தன்னை தயார்படுத்திக் கொண்டார். இது இவரின் ரசிகர்களை மிகவும் வேதனைப்படுத்தும் விதமாக அமைந்தது. மேலும் இவரின் நடிப்பை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ரசிகர்கள். இதைத்தொடர்ந்து தற்பொழுது தெலுங்கில் ஒரு படம் நடித்து வருகிறார்.

அசின்: குறிப்பிட்ட காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். சூர்யா, விஜய், அஜித், கமல் ஆகிய டாப் ஹீரோஸ் உடன் நடித்தவர். இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி படம் இவருக்கு சிறப்பாக அமைந்தது. அதன்பின் பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் தன் குழந்தையோடு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவரின் பாலிவுட் பயணம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால் நடிப்பில் ஆர்வம் இழந்து காணப்படுகிறார்.

Also Read:சாயிஷாவுக்கு முன்னாடியே அவரது அம்மாவை உஷார் செய்த ஆர்யா.. கன்னுக்குட்டிக்கு வீசிய வலையில் விழுந்த பசுமாடு!

ஜெனிலியா: இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடா ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடித்த பாய்ஸ், உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன்பின் ரித்தீஷை மணந்து கொண்டார். மேற்கொண்டு நடிப்பிற்கு இடைவெளி விட்ட இவர் வெட் என்னும் மராட்டிய மொழி படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் இவர் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

சாயிஷா: ஜூங்கா, கஜினிகாந்த்,டெடி ஆகிய படங்களில் நடித்தவர்தான் சாயிஷா. இவர் தமிழில் சில படங்களில் நடித்து உள்ள நிலையில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் நடிப்பிற்கு இடைவெளி விட்ட இவர் தற்போது வெளிவந்துள்ள பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். மேலும் வாய்ப்புகளை தவறவிட்ட இவர் தற்பொழுது இப்படத்தில் கிடைத்த வாய்ப்பான ஐட்டம் ரோலில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:மனைவி சாயிஷாவுக்காக ஆர்யா எடுக்கப்போகும் ரிஸ்க்.. சொந்தக் காசில் சூனியம் வைக்கிறது இதுதானா?

ஏமி ஜாக்சன்: இவர் தமிழ்,இந்தி, கனடா மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் ஐ, தங்க மகன், தாண்டவம், மதராசபட்டினம், தெறி, 2.0 ஆகிய படங்களில் இவரின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும். அதன்பின் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் ஜார்ஜுடன் வாழ்ந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மேலும் தன் நடிப்பினை விடாத இவர் தற்பொழுது தமிழில் அடி எடுத்து வைத்திருக்கிறார்.