Connect with us

Entertainment | பொழுதுபோக்கு

வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கப்பட்ட 5 நடிகைகள்.. உலகநாயகன் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா?

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முத்திரை குத்தி ஒதுக்கப்பட்ட 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

kamal-with-daughters

Tamil Actresses: தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகைகள் இப்போது வித்தியாச வித்தியாசமான காரணங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றனர். அதிலும் உலகநாயகன் கமலஹாசனின் மகளுக்கு இப்படி ஒரு அசிங்கமா என பலரையும் ஆதங்கப்பட வைக்கிறது.

சாய் பல்லவி: நேச்சுரல் பியூட்டி ஆக பார்க்கப்படும் நடிகை சாய் பல்லவி டான்ஸ் மற்றும் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். இவர் முதல் முதலாக மலையாள திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சர் ஆக நடித்து இளசுகளைக் கவர்ந்தார். அதன் பின்பு தமிழில் தனுசுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும், சூர்யாவிற்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் இவருடைய படங்களில் சேலை, தாவணி பாவாடை போன்ற உடைகளில் மட்டும் நடிப்பேன் என்று கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு இருந்தார். இதனால் நோ கிளாமர் ரோல்ஸ் என டாப் நடிகர்களின் பட வாய்ப்புகளை தொடர்ந்து தட்டிக் கழித்த சாய் பல்லவியை, இப்போது தமிழ் சினிமா ஒதுக்கி விட்டது.

Also Read: கமல் என்சைக்ளோபீடியானு சும்மா சொல்லல.. அவர் தொடாத இடமே இல்ல, ஆல்ரவுண்டராக இருக்க முக்கியமான 9 காரணங்கள்

ஸ்ருதிஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் பாடகியாக தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர். இவர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்ற ஸ்ருதிஹாசன், இப்போது தமிழ் பக்கம் வராமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் மட்டுமே கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் இவருக்கு சுத்தமாகவே நடிப்பு வரலை என தமிழ் ரசிகர்கள் உறுதி செய்துவிட்டதால், தமிழில் பட வாய்ப்பு இல்லை. உலக நாயகனின் வாரிசுக்க இந்த நிலைமை! என்றும் சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

பூஜா ஹெக்டே: தமிழில் முகமூடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக பல ஹிட் படங்களை கொடுத்தவர்தான் பூஜா ஹெக்டே. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மறுபடியும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்தது. இதனால் தளபதியுடன் ஜோடி போட்டும் வொர்க் அவுட் ஆகாததால் இவரை ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி தமிழ் சினிமா ஒதுக்கி வைத்திருக்கிறது.

Also Read: மீனாவின் அழகில் மயங்கி கிடந்த 4 நடிகர்கள்.. காதல் எனக் கூறி திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட சம்பவம்

அமலாபால்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அமலாபால், வெகு சீக்கிரமே டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதன் பின் இயக்குனர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட அமலாபால், சில மாதத்திலேயே விவாகரத்தும் பெற்று விட்டார்.

விவாகரத்திற்கு பிறகு ஆடையே இல்லாமல் ஆடை படத்திலும், கவர்ச்சி தூக்கலான கிளாமர் ரோலிலும் மட்டுமே நடிப்பேன் என்று அடம் பிடித்து நடித்துக் கொண்டிருப்பதால், இவருக்கும் தமிழில் தற்போது பட வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லாமல் போய்விட்டது.

சமந்தா: தென்னிந்திய நடிகையாக வலம் வரும் சமந்தா., தமிழில் டாப் நடிகர்களின் படங்களில் ஜோடி போட்டு கலக்கியவர். ஆனால் சமீப காலமாகவே இவருடைய படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. முதலில் சமந்தா உயரம் கம்மியான நடிகை என்று அவரை ஒதுக்கினார்கள். இப்போது அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் வாடுகிறார் என்று பட வாய்ப்புகளை தர மறுக்கின்றனர்.

Also Read: எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

Continue Reading
To Top