திரையில் போல்டான கதாபாத்திரத்தில் ஜொலித்த 5 நடிகைகள்.. ஆல் அட்ரஸ் இல்லாமலே போன ஏமி ஜாக்சன்

கோலிவுட்டில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்களிடம் பிடித்த டாப் 5 கதாநாயகிகள் தற்போது ஆல் அட்ரஸ் இல்லாமலே போனார்கள். அதிலும் துரை அம்மாவாக ஜொலித்த ஏமி ஜாக்சன் இப்போது சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

ரகுல் பிரீத் சிங்: தெலுங்கு தமிழ் ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயின் ஆக வட்டமடித்த ரகுல் பிரீத் சிங் கோலிவுட்டிற்கு கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு என் ஜி கே போன்ற படங்களில் போல்டான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்தார் இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது.

Also Read: ரொமான்ஸ் பண்ண அவர்தான் வேண்டும்.. சுறா மீனுக்கே ரகுல் பிரீத்தி சிங் விரிக்கும் வலை

ஏமி ஜாக்சன்: மதராசபட்டணத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்த இங்கிலாந்தை சேர்ந்த துரையம்மா தான் ஏமி ஜாக்சன். இவர் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அழகி பட்டத்தை வென்றது மட்டுமின்றி உலக அளவில் 18-க்கு மேற்பட்ட அழகி விருதுகளை வாங்கி குவித்தவர். இதனால் சினிமா வாய்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து தமிழில் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். இருப்பினும் தற்போது ஆல் அட்ரஸ் தெரியாத அளவுக்கு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆகிவிட்டார்.

அஞ்சலி: கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர், 2010 வெளியான அங்காடித்தெரு படத்தில் கனியாக நடித்த ரசிகர்களின் பிடித்தமான நடிகையாக மாறினார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும், மங்காத்தா, தூங்கா நகரம், கலகலப்பு சேட்டை போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர். ஆனால் இப்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஆல் அட்ரஸ் தெரியாமல் இருக்கிறார்.

Also Read: பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆன தன் குழந்தைக்கு போட்டோஷூட் நடந்திய ஏமி ஜாக்சன்

வரலட்சுமி: சிம்புவுடன் போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தாரை தப்பட்டை போன்ற படங்களில் போல்டான கேரக்டரில் நடித்து கலக்கியவர். அதன் பின் சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படங்களில் பிள்ளையாகவும் ஒரு ரவுண்டு கட்டினார். ஆனால் இப்போது தமிழில் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்று டோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

ரித்திகா சிங்: ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின் ஆக வலம் வந்த ரித்திகா சிங், தமிழில் இறுதி சுற்று படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார். அதன்பின் ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா படத்தில் கதாநாயகியாக செம போல்டாக நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் திறமை இருந்தும் சர்வே பண்ண முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார்.

Also Read: பிரம்மிப்பூட்டும் டாப் 5 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படங்கள்.. 90’லேயே மிரள விட்டிருக்காங்க

இவ்வாறு இந்த 5 நடிகைகளும் துணிச்சலான கதாபாத்திரத்தில் டாப் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம போல்டாக நடித்துக் கலக்கியவர். அதிலும் துரையம்மாவாக ரசிகர்களை கவர்ந்த எமி ஜாக்சன் ஆல் அட்ரஸ் தெரியாமல் போனார்.