கேப்டனுக்கு மட்டுமே கட்டுப்படும் 5 நடிகர்கள்.. விஜயகாந்துக்கு குடைச்சல் கொடுத்த வீரபத்ரன்

5 Actors: தனக்கே உரிய திறமையை வெளிக்காட்டும் விதமாய் தமிழ் சினிமாவில் நடித்து முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். இந்நிலையில் இவருக்கு மட்டுமே கட்டுப்படும் 5 பிரபலங்கள் குறித்த தகவலை இங்கு காண்போம்.

தியாகு: குணச்சித்திர நடிகர் ஆகவும், காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தியாகு. ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கால கட்டத்தில் விஜயகாந்த் உடன் நெருங்கி பழகிய நண்பர் ஆவார். கேப்டனின் அனைத்து குணா அம்சங்களையும் அறிந்தவர் தான் தியாகு. விஜயகாந்த் போல ஒரு எதார்த்தமான மனிதனை பார்க்க முடியாது என பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

Also Read: மறைந்த இயக்குனர் சித்திக் சூப்பர் ஹிட் அடித்த ஆறு படங்கள்.. 400 நாட்கள் ஓடிய கனகாவின் மறக்க முடியாத படம்

வாகை சந்திரசேகர்: துணை நடிகராகவும், வில்லனாகவும் பல படங்களில் தன் திறமையை வெளிக்காட்டியவர் சந்திரசேகர். இவர், விஜயகாந்த், தியாகு மணிவண்ணன் போன்றவர்கள் எல்லாம் நண்பர்களாம். தன் நண்பனுக்கு ஒன்று என்றால் எந்த லெவலுக்கும் செல்லும் தன்மை கொண்டவர் விஜயகாந்த். கேப்டன் மீது கொண்ட மரியாதை காரணமாக அவர் சொல்லும் வார்த்தைகளை நாங்கள் ஒரு நாளும் தவறியதில்லை என கூறினார்.

மன்சூர் அலிகான்: வில்லன் கதாபாத்திரம் ஏற்று தன் மிரட்டலான நடிப்பால் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மன்சூர் அலிகான். படத்தில் இவர் மேற்கொள்ளும் வில்லத்தனமான காட்சிகள் காண்போரை கதி கலங்க செய்யும். இருப்பினும் தமிழ் சினிமாவில் இவரை அடக்க ஒரே ஒரு நபர் இருக்கிறார் என்றால் அவர்தான் கேப்டன். இவர் மீது ஏற்படும் புகார் அனைத்தும் கேப்டன் இடம் தான் செல்லுமாம். கேப்டன் ஒரு ஃபோன் போட்டால் போதுமாம் அடங்கி விடுவாராம் மன்சூர் அலிகான்.

Also Read: நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

செந்தில்: நகைச்சுவை நடிகராய் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் செந்தில். படங்களில் இவரின் நகைச்சுவை இடம்பெறாதா என எதிர்பார்த்து படம் வாங்கிய விநியோகஸ்தர்களும் உண்டு. ஒரு முறை படப்பிடிப்பில், குடிகார கும்பலால் ஏற்பட்ட பிரச்சனையால் பெரும் கலவரத்தை சந்திக்க நேரிட்டதாம். அப்பொழுது விஜயகாந்த் தான் முன் வந்து அப்பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறினார் செந்தில்.

ஆனந்தராஜ்: 80- 90 காலகட்டத்தில் தன் திறமையை வெளிக்காட்டும் விதமாய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டவர் ஆனந்தராஜ். படங்களில் வில்லனாக காட்டப்படும் இவர் நிஜத்தில் கேப்டனின் பேச்சை தவறாதவராய் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 72 வயதிலும் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும் முத்துவேல் பாண்டியனின் 5 சாதனைகள்.. ரிலீஸ்க்குள்ள ஹார்ட் அட்டாக் வந்துரும் போல

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்