நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

Actress Nayanthara: மலையாள படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை தான் நயன்தாரா. இந்நிலையில் ஆரம்ப காலத்தில் தமிழில் நடிக்க வந்த இவர் சந்தித்த சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

மலையாள மொழி படங்களில் நடித்து வந்த நயன்தாரா தமிழில் சரத்குமார், ரஜினி போன்ற பிரபலங்களோடு ஜோடி போட்டு வெற்றி கண்டிருக்கிறார். இந்நிலையில், 2005ல் துரை இயக்கத்தில் வெளிவந்த படம் தான் தொட்டி ஜெயா. இப்படத்தில் சிம்பு, கோபிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: கமலுக்கு செய்யாத பிரம்மாண்டத்தை விஜய்க்கு செய்யும் லோகேஷ்.. கோவைக்கு படையெடுக்க போகும் தளபதி வெறியர்கள்

இப்படத்தின் ஹீரோயின் ஆடிஷன் மேற்கொண்ட போது, நடிப்பு வரலன்னு சொல்லி நயன்தாராவை ரிஜக்ட் செய்து இருக்கிறார் இயக்குனர். இதை அறிந்த இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, ஏன் அவரை ரிஜக்ட் செய்து விட்டீர்கள். இவர் நடித்த அய்யா படம் மாபெரும் வெற்றியை கண்டு இருக்கிறது.

மேலும் ரஜினியோடு நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள், இவர் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறுவார் என கலைப்புலி தாணு, நயன்தாராவை குறித்து அப்பொழுதே பேசி இருக்கிறார். இருப்பினும் தொட்டி ஜெயா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்காமல் அவருக்கு பதிலாக கோபிகாவை நடிக்க வைத்தார் இயக்குனர் துரை.

Also Read: வாய் சவடால், அஜித் படத்தை தரை குறைவாக பேசிய இயக்குனர்.. அடாவடி பேச்சுக்கு ஆப்படித்த சம்பவம்

ஆயினும், இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது. மேலும் நயன்தாரா இந்த ஓராண்டில் சரத்குமார் உடன் அய்யா, ரஜினி உடன் சந்திரமுகி போன்ற படங்களில் வெற்றியை கொடுத்து தனக்கு நடிக்க தெரியலன்னு சொன்னவர்கள், மூக்குடையும் அளவிற்கு செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு தொட்டி ஜெயா படத்தில் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும் அதை தொடர்ந்து வல்லவன், இது நம்ம ஆளு போன்ற படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வல்லவன் படம் இவர்கள் இருவரின் நடிப்பில் மாபெரும் வெற்றியை கண்டது.

Also Read: ஜெயிலர் பார்த்தாச்சு, 4 வருடம் கழித்து இமயமலை கிளம்பிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்