நக்கலிலும், நையாண்டியிலும் பிச்சு உதறும் 5 நடிகர்கள்.. சத்யராஜுக்குகே சொல்லி கொடுத்த குரு இவர்தான்

சில நடிகர்கள் நகைச்சுவை வாயிலாக பகுத்தறிவை புகட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சரளமாக பேசும்போதே நக்கலும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும். சிலரது ஊர்களில் இதுபோன்று பாஷை புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் நக்கல், நையாண்டியில் பிச்சு உதறி உள்ளனர்.

கவுண்டமணி : நக்கல், நையாண்டி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கவுண்டமணி தான். அவரது படங்களில் உடனே கவுண்டர் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்திடுவார். மேலும் இவர் செந்திலுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடியில் கலக்கி உள்ளார்.

Also Read :கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 9 படங்கள்.. சூப்பர் ஹிட்டான பக்கா லிஸ்ட்!

மணிவண்ணன் : கோயமுத்தூர் என்றாலே குசும்பு என்பார்கள். அவ்வாறு கோவை மாவட்டத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் மணிவண்ணன். ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மணிவண்ணன் பணியாற்றி இருந்தார். மேலும் இவரது பெரும்பாலான படங்களில் நக்கலும், நையாண்டியும் இடம் பெற்று இருக்கும்.

சத்யராஜ் : சத்யராஜுக்கு நக்கலும், நையாண்டியையும் சொல்லிக் கொடுத்தது அவரது குரு மணிவண்ணன் தான். சத்யராஜின் பல படங்களை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அப்போது மணிவண்ணன் சொல்லிக் கொடுத்த பாஷையை அப்படியே பிடித்துக் கொண்டு தற்போது வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.

Also Read :ஒரே வருடத்தில் சகட்டுமேனிக்கு நடித்துத் தள்ளிய நடிப்பு அரக்கன்.. அதுக்குனு இவ்வளவு படங்களா.?

பார்த்திபன் : யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வித்யாசமாக யோசிக்க கூடியவர் நடிகர் பார்த்திபன். இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டார். இவர் சாதாரணமாக மேடைப்பேச்சுகளிலேயே நக்கல், நையாண்டியாக பேசக்கூடியவர்.

சந்தானம் : ஒரு காலகட்டத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலுமே நகைச்சுவை நடிகராக சந்தானம் நடித்து வந்தார். அதற்குக் காரணம் அசால்டாக அடுத்தடுத்து கவுண்டர் கொடுப்பார். இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனால் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.

Also Read :வேறுவழியில்லாமல் துவண்டு போன சந்தானம் செய்யும் வேலை.. மேடையிலேயே வெளியான தகவல்

Next Story

- Advertisement -