சாஃப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடல் எடுக்கும் 5 நடிகர்கள்.. கோடியில் புரளும் தனி ஒருவன்

Actor Aravindswamy: சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடிகராய் வெற்றி படங்களை கொடுத்தும், தன் கேரியரையும் மேற்கொண்டு வரும் பிரபலங்கள் ஏராளம். அவ்வாறு தன் திறமையை கொண்டு, வேறு பரிமாணங்களிலும் வெற்றி கண்டு வருகின்றனர்.

மேலும் படத்தில் தான் ஏற்கும் கதாபாத்திரங்களில் மூலம் தன்னை நிரூபித்தும் வருகின்றனர். அவ்வாறு நடிப்பு மட்டுமல்லாது தன் எண்ணத்திற்கு உயிர் கொடுத்து சாப்ட்வேர் பிசினஸில் பின்னி பெடலெடுத்த 5 செலிபிரிட்டிசுகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம்.. இவ்வளவுதானா?

டாப்ஸி: தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தில் தனுஷ்ற்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸி. அதை தொடர்ந்து வந்தான் வென்றான், அனபெல்லா சேதுபதி போன்ற படங்களில் இடம் பெற்றிருப்பார். மேலும் பிறமொழி படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் தன் நண்பர்களுடன் இணைந்து பாண்ட் ஆப் ஒன்றை டெவலப் செய்து உள்ளார். மேலும் தி வெட்டிங் ஃபேக்டரி என்னும் கம்பெனியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாஸ்: ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து விஐபி, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே போன்ற படங்களில் பெரிதும் பேசப்பட்டார். அதன்பின் சினிமாவில் சரிவர வாய்ப்பு கிடைக்காத இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராய் நியூசிலாந்தில் பணிபுரிந்து, அதன் பின் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் சிஇஓவாக, பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

Also Read: சூப்பர் ஸ்டார் கூப்பிட்டும் வராத பிரபலம்.. கமலின் அனுமதிக்காக காத்திருந்த ரஜினி

சோனு சூட்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் வில்லனாகவும், குணசேத்திர வேடத்திலும் நடித்துள்ளார். தபாங், அருந்ததி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இவர் சொந்தமாக ஒரு ஐடி நிறுவனத்தை ஆரம்பித்து பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் சாஃப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்கும் ஆப்பை டெவலப் செய்துள்ளார்.

அரவிந்த்சாமி: தமிழில் மணிரத்தினம் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி தளபதி, ரோஜா, பாம்பே போன்ற படங்களில் பெரிதும் பேசப்பட்டார். அதைத்தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் வில்லனாகவும் தெறிக்க விட்டிருப்பார். மேலும் இவர் டேலண்ட் மேக்ஸிமம் என்னும் ஐடி நிறுவனத்தை உருவாக்கி நல்ல லாபத்தை பார்த்து வருகிறார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. எல்லாரையும் மிஞ்சிய அந்த நபர்

நெப்போலியன்: புது நெல்லு புது நாத்து படம் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். அதை தொடர்ந்து இவர் முன்னணி கதாநாயகனாகவும், வில்லனாகவும் இடம்பெற்று மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வந்தார். அதை தொடர்ந்து ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் ஐடி நிறுவனத்தின் மூலம் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்