சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. எல்லாரையும் மிஞ்சிய அந்த நபர்

Pandiyan Stores Serial: விஜய் டிவியின் சீரியல்களில் மக்கள் அதிகம் பார்ப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், அண்ணன் தம்பிகளின் பாசம் என சென்டிமென்ட்களை வாரி வழங்கும் இந்த சீரியலின் முக்கியமான ஆர்டிஸ்ட்டுகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்னவென்று பார்க்கலாம்.

குடும்பத்தின் மூத்த அண்ணனாக நடிப்பவர் ஸ்டாலின். கண்மூடித்தனமான அன்பு, அதைவிட அதிகமான கண்டிப்பு என இரண்டையும் கலந்து காட்டும் இந்த மூர்த்தி கேரக்டரில் நடிப்பதற்கு அவர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் 35,000 ஆகும்.

Also Read:ஒரு எபிசோடுக்கு பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா தல சுத்துது

மூர்த்தியின் முதல் தம்பியாக நடிப்பவர் வெங்கட். இவர் தற்போது குடும்பத்துடன் ஏற்பட்ட சிறிய மனக்கசத்தால் தன்னுடைய மாமனார் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்த நாடகத்தில் ஜீவா கேரக்டரில் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் 25,000 ஆகும்.

மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக நடிப்பவர் குமரன். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் நிறைய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரனுக்கு பெண் ரசிகைகள் இடையே வரவேற்பு அதிகம். இவர் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் 30,000 ஆகும்.

சீரியல் ஆரம்பித்த காலகட்டத்தில் முல்லை என்ற கேரக்டருக்காகவே நிறைய பேர் பார்க்கத் தொடங்கினர். அதற்கு முக்கிய காரணம் வி ஜே சித்ரா தான். அதன்பிறகு காவ்யா இந்த கேரக்டரில் நடித்தார். அவரும் விலகிய பிறகு தற்போது லாவண்யா நடித்து வருகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு 20,000 சம்பளமாக வாங்குகிறார்.

Also Read:எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தற்போது இந்த நாடகத்தை விடாமல் பார்ப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஹேமா தான். ஹேமா நடிக்கும் மீனா கேரக்டர் தான் தற்போது அதிக ரீச்சில் இருக்கிறது. ஹேமா ஒரு எபிசோடுக்கு 35,000 சம்பளமாக வாங்குகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த மருமகளாக தனம் கேரக்டரில் நடிப்பவர் சுஜிதா. இவருக்கு ஏற்கனவே வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நிறைய அனுபவங்கள் இருக்கிறது. இந்த நாடகத்தின் ஆர்டிஸ்ட்களில் சீனியர் என்று கூட இவரை சொல்லலாம். இவருக்கு ஒரு எபிசோடுக்கு 40,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

தனம் கேரக்டரின் அண்ணனாக வருபவர் தான் ஜகா. இவருக்கு இந்த நாடகத்தில் அவ்வளவாக காட்சிகள் இருக்காது. அவ்வப்போது தலை காட்டுவார். விஜய் டிவியின் நிறைய சீரியல்களில் நடித்த இவருக்கு ஒரு எபிசோடுக்கு 15,000 கொடுக்கப்படுகிறது.

Also Read:பாண்டியன் ஸ்டோர்ஸில் வசமாக மாட்டிக் கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா.. வேலைக்கு ஆப்பு வைத்த மேனேஜர்

- Advertisement -

Trending News