ரீ ரிலீஸில் 10 கோடியை தாண்டிய 4 படங்கள்.. ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த விஜய்

Actor Vijay : பொதுவாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் சமீபகாலமாக வெளியாகி தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் முன்பு வெளியான சூப்பர் ஹிட் படங்களை புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

அந்தப் படங்கள் எதிர்பார்க்காத அளவு வசூலை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் 10 கோடிக்கு மேல் ரீ ரிலீஸில் வசூல் செய்த படங்கள் நான்கு உள்ளது. அதில் ஹாலிவுட் படங்களுக்கு போட்டியாக விஜய்யின் கில்லி படமும் வசூல் செய்திருக்கிறது.

தரணி இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா காம்போவில் வெளியான கில்லி படத்திற்கு பேர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் என்ன தான் கில்லி படத்தை பார்த்தாலும் திரையரங்குகளில் இப்போது பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ரீ ரிலீஸில் வசூலை அள்ளிய கில்லி

அதன்படி கில்லி படம் தற்போது 10 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் தான் டைட்டானிக். இந்தப் படம் அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்து வசூலை அள்ளியது.

அதேபோல் 1975 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் சோலே. மேலும் இந்தப் படத்தை 2013 இல் மீண்டும் ரீ ரிலீஸ் செய்திருந்தனர். இப்படமும் 10 கோடியை தாண்டி வசூல் பெற்றது.

அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு வெளியாகி சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது அவதார் படம். இந்த படம் அடுத்தடுத்த பாகங்களும் உருவாகி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு தியேட்டரில் மீண்டும் ரிலீஸாகி வசூலை அள்ளியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்