TTF வாசனுக்கு 4 கோடி சம்பளமா.? ஏக்கர் கணக்கில் புழுகி பொழப்ப நடத்தும் இயக்குனர்

TTF Vasan: நாலு காசு கையில் இருந்தால் டைரக்டர் ஆயிடலாம் என்று ஆளாளுக்கு கிளம்பி வந்துறாங்க. அதிலும் கல்யாணம் பண்ணிட்டு அந்த காசுல டைரக்டர் ஆனேன் என்பதை வெக்கமே இல்லாமல் இயக்குனர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ஏக்கர் கணக்கில் புழுகுவதையும் காது கொடுத்து கேட்க முடியல.

அறிமுக இயக்குனர் செல்லம் இயக்கத்தில், பைக் ரைட் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரில் பைக்கில் அதிவேகமாக கையில் சூலாயுதத்துடன் டிடிஎஃப் வாசன் பயணிப்பது போல் இருந்தது பெரும் சர்ச்சையானது.

அந்தப் படத்தோட நிலைமை என்ன என்று தெரியல, அதற்குள் இயக்குனர் செல்லம் இன்னொரு படத்தையும் டிடிஎஃப் வாசனை வைத்து எடுக்கப் போகிறாராம். அந்த படத்திற்கு டிடிஎஃப் வாசனுக்கு மட்டும் 4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தின் பட்ஜெட் 5 கோடியாம்.

இந்த படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தான் செல்லம் சம்பளம் வாங்குவதாகவும் சொல்கிறார். ஒரு கட்டத்தில் அந்த படத்தோட தயாரிப்பாளரே நான் தான் என்றும் கூறுகிறார். ஆனால் டிடிஎஃப் வாசனுக்கு 4 கோடி சம்பளம் கொடுக்கும் போது நான் இல்ல, ஆடி மாசம் கூல் ஊற்றுவதற்காக போயிட்டேன் என அண்ட புழுகு புழுகுகிறார்.

Also Read: இந்த கொசு தொல்லை தாங்கல, ஆஸ்கர் விருதே வேண்டாம்.! கூச்ச நாச்சமே இல்லாமல் உருட்டும் மஞ்சள் வீரன் இயக்குனர்

அநியாயத்திற்கு புழுகும் இயக்குனர் செல்லம்

அதுமட்டுமல்ல இயக்குனர் ஆகுவதற்கு முன்பு உதவி இயக்குனராக பணிபுரிவது அல்லது குறும்படங்கள் எதாவது எடுத்த அனுபவம் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, அதெல்லாம் தேவையில்லை. டைரக்டர் ஆகணும்னு நினைச்சா ஆயிடனும். இப்ப நான் ஆகலையா!. மஞ்சள் வீரன் படத்தை கலை நயத்துடன் எடுத்தேன். ஆனால் அடுத்த படத்தை கமர்சியலான படமாக எடுக்கப் போகிறேன். இதெல்லாம் கேட்டுக் கொண்டு பொறுமை இழந்த செய்தியாளர், ‘உங்களுக்கு இப்ப கல்யாண வேற ஆயிருச்சு எப்படி?’ என்றும் கேட்க உடனே செல்லம், ‘கல்யாணம் பண்ணுன பிறகு வந்த காசுல தான் டைரக்டர் ஆனேன்’ என்று வெட்கமில்லாமல் சொல்கிறார்.

இப்படிப்பட்ட கோமாளிகள் எடுக்கிற படத்தை பாக்குறதுக்கு நமக்கு என்ன தலை எழுத்தா! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இதையெல்லாம் கண்டுக்காத? அறிமுக இயக்குனர்கள் தரமான படத்தை தான் எடுக்கிறார்களா? அல்லது பொழுது போக்கிற்கும், பப்ளிசிட்டிக்காகவும் படம் எடுக்கிறார்களா? என்பதை ஆராய வேண்டும். இப்படிப்பட்ட ஆளுங்க எடுக்கிற படங்களை ஒரு தியேட்டர்ல கூட ரிலீஸ் செய்யாமல் இருந்தால் தான், அடுத்து இதுபோன்ற இன்னொரு செல்லம், டிடிஎஃப் வாசனும் வர மாட்டார்கள்.

Also Read: TTF மஞ்சள் வீரன் பைக்குக்கு சமாதி கட்டிய நீதிபதி.. யூடியூப் மூலம் வாய்சவடால் விட்டவனுக்கு வச்ச ஆப்பு.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்