வாயை பிளக்கும் அளவுக்கு சம்பளத்தை உயர்த்திய 4 நடிகர்கள்.. முதல்ல ஒரு ஹிட்டு கொடுங்க பாஸ்

தற்போது டாப் நடிகர்கள் சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அதிக பிரபலம் இல்லாத நடுத்தர நடிகர்களின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள். ஆனால் அவர்களும் தற்போது சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தி உள்ளனர். அந்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

அசோக் செல்வன் : சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு வரவில்லை. ஆனால் தனது சம்பளத்தை ஒரு கோடியாக நிர்ணயத்த உள்ளார் அசோக் செல்வன்.

Also Read :3 வருடம் என் பக்கத்தில் வராதீங்க.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அசோக் செல்வன்

கதிர் : மதயானை கூட்டம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் கதிர். இவர் விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இனிமேல் சில காலமாக அவரது படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில் ஒரு படத்திற்கு ஒன்றரை கோடியாக தனது சம்பளத்தை கதிர் உயர்த்தியுள்ளார்.

விக்ரம் பிரபு : சினிமா பின்புலத்திலிருந்து வந்தவர் நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடித்த முதல் படமான கும்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். ஆனால் ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தற்போது வரை தவித்து வரும் விக்ரம் பிரபு ஒரு படத்திற்கு 2 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

Also Read :ஏற்கனவே ஓவர் கிசுகிசு.. பீல்ட் அவுட் ஆகி ரீஎன்ட்ரியிலும் விக்ரம் பிரபுவையே வளைத்த நடிகை

விமல் : களவாணி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விமல்.ஆனால் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை பெரிய அளவில் பேசப்படவில்லை. அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படங்களும் வெளியாகவில்லை. ஆனாலும் தனது சம்பளத்தை விமல் 2 கோடியாக உயர்த்தி உள்ளார்.

Also Read :தலைக் கனத்தால் அழிந்த கொண்டிருக்கும் 6 ஹீரோக்கள்.. சீட்டிங் கேசில் டேமேஜ் ஆன விமல்

Next Story

- Advertisement -