வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஏற்கனவே ஓவர் கிசுகிசு.. பீல்ட் அவுட் ஆகி ரீஎன்ட்ரியிலும் விக்ரம் பிரபுவையே வளைத்த நடிகை

சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த நடிகை ஹோம்லி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நன்றாக ஓடவே அடுத்தடுத்த பட வாய்ப்பு குவிந்த வண்ணம் இருந்தது. தமிழில் இவரது அறிமுக படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின்பு அடிக்கடி விக்ரம் பிரபுவுடன் பல படங்களில் ஜோடி போட்டார். மேலும் தொடர்ந்து இந்த நடிகை மீது அடிக்கடி கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் காமெடி நடிகர் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டபோது இந்த நடிகை ஓவர் போதையில் அலப்பறை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.

தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இந்த நடிகை மீது வந்ததால் படவாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது மீண்டும் ரீ-என்ட்ரியில் இந்த நடிகை விக்ரம் பிரபுவுடன் ஜோடி போடயுள்ளார். அதாவது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஸ்ரீதிவ்யா தான் அவர்.

வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, ஈட்டி, மருது போன்ற படங்களில் ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இடையில் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது விக்ரம் பிரபுவுடன் ரீஎன்ட்ரியில் ரெய்டு என்ற படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா கூட்டணியில் வெள்ளக்கார துரை படம் வெளியானது. மேலும் விக்ரம்பிரபு நடிப்பில் கடைசியாக வெளியான டாணாகாரன் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

இதனால் ரெய்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தற்போது விக்ரம் பிரபுவை வைத்து ஸ்ரீதிவ்யா தமிழில் தரமான கம்பேக் கொடுக்க நினைத்துள்ளார். இதன்மூலம் ஸ்ரீதிவ்யாவின் கனவு நிறைவேறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

Trending News