நாசர் சினிமாவில் வளர்த்துவிட்ட 3 பேர்.. சோடை போகாமல் அடித்து பட்டையை கிளப்பும் நடிகர்கள்

நாசர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்க கூடியவர். வில்லனாகவும் மிரட்டியும் இருக்கிறார், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கண்ணீர் கடலிலும் ஆழ்த்தியுள்ளார். மேலும் அனைத்து மொழிகளிலும் பரிச்சயமானவர் நாசர் என்பதால் பான் இந்திய மொழி திரைப்படங்களில் இவர் தான் முதல் தேர்வாக உள்ளார்.

இந்நிலையில் நாசர் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்களை வளர்த்து விட்டார். இவர்கள் கூத்து பட்டறையில் நடித்துக் கொண்டிருக்கும் போது நாசர் அங்கு சென்று நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பாராம். இந்த நடிகர்கள் அதை அப்படியே மனதில் வைத்து கற்றுக் கொண்டுள்ளனர்.

Also Read :நாயகன் படத்தில் திணறிய நாசர்.. அதுக்கு கமல் கொடுத்த ட்ரீட்மென்ட்

பசுபதி : பன்முகத்தன்மை கொண்டவராக தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் பசுபதி. வெயில், விருமாண்டி, குசேலன், அசுரன் படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நாசர் சொல்லிக் கொடுத்த நடிப்பு சோடை போகவில்லை என நிரூபித்துள்ளார் பசுபதி.

இளங்கோ குமாரவேல் : நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இளங்கோ குமாரவேல். இவரும் கூத்துப்பட்டறையில் இருந்த பயிற்சி பெற்ற சினிமா துறையில் கால் பதித்துள்ளார். அபியும் நானும் படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருப்பார். மேலும் பயணம், வாகை சூடவா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Also Read :30 ஆண்டு கால சினிமா வாழ்க்கை முடிகிறதா.. கொந்தளித்த நாசர்

ஜெயப்பிரகாஷ்: தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளராக அறியப்படுபவர் ஜெயபிரகாஷ். இவர் பசங்க படத்தில் சொக்கலிங்கம் வாத்தியாராக நடித்திருப்பார். மேலும் வம்சம், நான் மகான் அல்ல, ரௌத்திரம், மங்காத்தா போன்ற பல படங்களில் ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளர். இவருடைய நடிப்பும் மிக யதார்த்தமாக இருக்கும்.

இவ்வாறு பசுபதி, இளங்கோ குமாரவேல், ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் தமிழ் சினிமாவிற்கு வளர்ந்து விட்டார் நாசர். அவர்களும் தன்னது குருவை பின்பற்றி தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் நாசர் கற்றுக்கொடுத்த நடிப்பு சோடை போகாது என அவருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Also Read :வெறித்தனமாய் நாசர் மிரட்டிய 6 படங்கள்.. கமலுக்கு தண்ணிகாட்டிய தேவர்மகன் மாயனை மறக்க முடியுமா!

Next Story

- Advertisement -