பொங்கல் ட்ரீட் ஆக ரிலீசாக இருக்கும் 6 படங்கள்.. தனுஷ் உடன் மோதும் Ex-மனைவி

Pongal 2024 Movies: ஒவ்வொரு வருடமும் பொங்கல் மற்றும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும். இந்த வருடம் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி அவர்களுடைய ரசிகர்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டத்தை கொடுத்தன. அடுத்த வருடம் அந்த வாய்ப்பு இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் முக்கியமான போட்டியாளர்கள் பொங்கல் நாளில் மோத இருக்கிறார்கள். 2024 ஆம் வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் ஆறு படங்கள்

லால் சலாம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியாகிறது. இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்திருக்கிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 12 அன்று ரிலீஸ் ஆகிறது.

கேப்டன் மில்லர்: நடிகர் தனுஷின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்திருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். வரலாற்று கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த வருடம் பொங்கல் நாளில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

Also Read:6 தமிழ் இயக்குனர்களை வேண்டாம் எனக் கூறி மாஸ்டர் பீஸ் கார்த்திக் சுப்புராஜை லாக் செய்த மாஸ் ஹீரோ

அயலான்: இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் படத்தையும் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் இது போன்ற சயின்ஸ் பிக்சன் கதையில் நடித்திருக்கிறார். ஏலியனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருக்கிறார்.

அரண்மனை 4: இயக்குனர் சுந்தர் சி அரண்மனை என்னும் தலைப்பில் தொடர்ந்து பேய் சீரிஸ் படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா இணைந்து நடித்திருக்கும் படம் தான் அரண்மனை 4. இந்த படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.

குண்டூர் காரம்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் குண்டூர் காரம். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

மெர்ரி கிறிஸ்துமஸ்: நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் மேரி கிறிஸ்துமஸ். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அடுத்த வருடம் பொங்கலை ஒட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

Also Read:கேஜிஎப், புஷ்பாவுக்கு போட்டியாக நானியின் தசரா.. வைரலாகுது வெறித்தனமான டீஸர்

- Advertisement -spot_img

Trending News