2022ல் 100 கோடி பட்ஜெட், பிரம்மாண்டமாக எடுத்தும் காலை வாரிவிட்ட 2 படங்கள்.. நினைத்ததை விட ஹிட் கொடுத்த 5 படங்கள்

love-today-movie2
love-today-movie2

2022 ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் நிறைவடையுள்ளதால், இந்த வருடத்தில் ஹிட்டடித்த படம் மற்றும் ஃப்ளாப்பான படம் எவை என்பதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆர்வத்துடன் தேடி தேடி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் 2022ல் தயாரிப்பாளர்களை நம்ப வைத்து கழுத்தடுத்த  டாப் ஹீரோக்களின் 2 படங்கள் தற்போது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த வருடம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தில் சியான் விக்ரம் பத்து கெட்ட நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கோப்ரா நினைத்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை. வெறும் 40 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றது.

Also Read: 100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ

இதைத்தொடர்ந்து டான், டாக்டர் படங்களின் மூலம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று திரையிடப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்தப் படம் வெறும் 30 கோடியை மட்டுமே ஒட்டுமொத்தமாக வசூல் செய்தது.

இப்படி இந்த இரண்டு படங்கள் தான் இந்த ஆண்டு பெரும் ஏமாற்றத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த படங்களாகும். ஆனால் குறைந்த பட்ஜெட்டில் நினைத்ததை விட இந்த வருடம் அதிக லாபத்தை கொடுத்த 5 படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: 2022ல் கோலிவுட்டுக்கு புதுவரவாக வந்த 5 பிரபலங்கள்.. இயக்குனர் வேண்டாம் நடிகராக அவதரித்த செல்வராகவன்

அதிலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் எல்லா விதத்திலும் திருப்திப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த படங்களின் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம், விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி போன்ற படங்களும் நினைத்ததை விட ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றது.

இதுமட்டுமின்றி வீட்ல விசேஷம் திரைப்படமும் பார்ப்போரை கலகலப்பாக்கியது. இவ்வாறு 2022 ஆம் ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த இந்த 5 படங்களின் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் தத்தளிக்க வைத்தது.

Also Read: ஒரே தயாரிப்பு நிறுவனத்திற்கு 500 கோடி பட்ஜெட்டில் பிரதீப்பின் 5 படங்கள்.. கல்லாப்பெட்டி நிரம்பியதும் ஆடும் ஆட்டம்

Advertisement Amazon Prime Banner