சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு போட்டி போடும் 2 வில்லன்கள்.. அக்கட தேசத்தில் தான் தேடி எடுப்பேன் என்று அடம் பிடித்த ராஜா

Thani Oruvan 2 Villain: தன்னுடைய ரீ என்டரி மூலம் அரவிந்த்சாமி என்கிற பெயரை மறக்கடித்து சித்தார்த் அபிமன்யு கேரக்டராக முளைத்து வெற்றியுடன் வந்திருக்கிறார் .  மேலும் தனி ஒருவன் படம் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவருடைய வில்லத்தனமான நடிப்பு தான். அந்த வகையில் தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப் போகிறது.

இதில் ஜெயம் ரவி மற்றும் அதில் நடித்த கேரக்டர்களை அப்படியே கொண்டு வருகிறார்கள். ஆனால் அரவிந்த்சாமி மட்டும் இல்லை. அவருக்கு பதிலாக வேறொரு வில்லனை நடிக்க வைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார்கள். காரணம் இந்த படத்திற்கு முக்கியமான கதாபாத்திரமே அந்த டெரரான வில்லன் தான்.

Also read: ஹீரோக்களை மறக்கடித்து ஸ்கோர் செய்த 5 வில்லன் கேரக்டர்கள்.. எல்லா புகழையும் தட்டிச் சென்ற சித்தார்த் அபிமன்யு

அந்த வகையில் சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பொருத்தமான இன்னொரு வில்லனை கொண்டு வருவதற்காக சல்லடை போட்டு அனைத்து பக்கமும் தேடிக் கொண்டு வருகிறார்கள். அதனால் யார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதற்காக பகத் பாசில் அவரிடம் பேசி இருக்கிறார்கள்.

ஆனால் அவர் இது குறித்து தற்போது வரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதனால் அடுத்த முயற்சியில் அபிஷேக் பச்சனை தேர்வு செய்திருக்கிறார்கள். அவரிடம் முழு கதையும் கூறி சம்மதத்தையும் வாங்கி விட்டார்கள். இதனால் கூடிய விரைவில் அடுத்த கட்ட வேலைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: சித்தார்த்தின் டக்கரான நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்.. கமலுடன் போட்ட மாஸ் கூட்டணி

இதற்கிடையில் அபிஷேக் பச்சன் சம்மதத்திற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது அங்க பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காததால் தமிழில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார். இதன் மூலம் தொடர்ந்து இங்கே நடித்து விடலாம் என்ற ஆசையில் இருக்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர் மோகன் ராஜாவும் இதில் நடிக்கப் போற வில்லனை கண்டிப்பாக அக்கட தேசத்தில் தான் இருந்து கூட்டிட்டு வரவேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார். எது எப்படியோ ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் மறுபடியும் தரமான ஒரு படத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: நல்ல வேலை முந்திக்கிட்டு கேரியரை காப்பாற்றிய ஜெயம் ரவி.. தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்