அவதார் படத்தால் பறிபோன இரண்டு உயிர்கள்.. காவு கொடுத்த ஜேம்ஸ், என்ன டா இப்படி பயமுறுத்திருங்க!

Avatar Movie: சினிமா கதைகளில் திகில் மற்றும் மர்ம சம்பவங்களை வைத்து படம் எடுப்பது என்பது ரசிகர்களுக்கு அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். ஆனால் ஒரு சினிமாவையே வைத்து நிஜத்தில் நடக்கும் திகில் சம்பவங்கள் ரொம்பவே ஆச்சரியமானதாக தான் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் அதுவே சர்ச்சைக்கு உள்ளாகி அந்த படத்தின் வெற்றியையும் கேள்விக்குறியாக்கி விடும் . அப்படித்தான் இப்போது அவதார் படமும் ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறது.

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் ஜேம்ஸ் கேமரூன். டைட்டானிக் திரைப்படத்தின் மூலம் இவர் உலக சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். இந்த படத்திற்கு பிறகு தான் பல வருடங்களுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் மீது அனைவரது பார்வையும் திரும்பியது. சமீபத்தில் கூட இந்த கப்பல் மூழ்கி இடத்தை பார்க்கச் சென்ற ஐந்து கோடிஸ்வரர்கள் இறந்து விட்டார்கள். அப்போது ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் மூழ்கிய இடத்தில் விசித்திரமான ஒரு சக்தி இருக்கிறது என்று கூட பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read:வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய அவதார் 2.. வாயை பிளக்க வைக்கும் மொத்த வசூல் ரிப்போர்ட்

தற்போது அவதார் திரைப்படத்தைப் பற்றியும் ஒரு சில செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அவதார். 1997இல் டைட்டானிக் ரிலீஸ் ஆன பிறகு பல வருடங்கள் கழித்து இவர் இயக்கிய திரைப்படம் தான் இது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் 14 வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்தார் ஜேம்ஸ்.

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரிலீசான இந்த படத்தை, ஆந்திராவை சேர்ந்த ஒருவர் தன் தம்பியுடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றிருந்தபோது, படம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் சட்டென மயங்கி கீழே விழுந்து இருக்கிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்த பொழுது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:3 வருட அவெஞ்சர்ஸ் ரெக்கார்டை சுக்குநூறாக்கிய அவதார்-2.. மொத்த வசூல் கேட்டாலே தல கிறுனு சுத்துது

இதே போன்று தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பாகத்தின் ரிலீஸ் போது தாய்வான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே உடல்நிலை மோசமாகி அங்கிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 11 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்த இவர் படத்தை ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு பார்த்த காரணத்தால் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இது போன்ற மரணங்கள் எதிர்ச்சையாக நடந்ததா அல்லது அவதார் படம் தான் காரணமா என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் அடுத்தடுத்து வரவிருக்கும் அவதார் மூன்று, நான்கு, ஐந்தாம் பாகங்களுக்கு சிக்கல் ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

Also Read:உலக அளவில் எதிர்பார்த்த அவதார் 2.. வாட்டர் அமுஸ்மெண்ட் பார்க் எப்படி இருக்கு? முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்