ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அஜித்தால் தான் தன்னுடைய கேரியரே போச்சு.. பரபரப்பாக பேட்டியளித்த எதிர்நீச்சல் பிரபலம்

Ethirneechal Serial Celebrity : டிஆர்பி ரேட்டிங்கில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சன் டிவியின் எதிர்நீச்சல். இதில் நடிக்கும் ஒவ்வொரு  நடிகர் நடிகைகளுக்கும் தனித்தனியே ரசிகர் கூட்டம் பெருகி வருகிறது. அதிலும் குணசேகரனுக்கு சொல்லவே வேண்டியதில்லை. 

சீரியலில் ரொம்பவே கரடு முரடாக இருக்கக்கூடிய குணசேகரனுக்கு மனைவியாக நடித்துக் கொண்டு இருப்பவர்தான் நடிகை கனிகா. இவர் பிரசன்னா உடன் 5 ஸ்டார் மற்றும் அஜித்துடன் வரலாறு போன்ற ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதிலும் அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் அவருக்கு காதலியாகவும் அம்மாவாகவும் இரண்டு கேரக்டரிலும் கனிகா நடித்தார்.

Also Read: குணசேகரன் உடம்பில் ஊறிப்போன நக்கல் நையாண்டி பேச்சு.. ட்ரெண்டிங் ஆகும் காமெடி வசனங்கள்

ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்கள் மட்டுமே வரிசையாக வந்ததாம். அதுவும் தன்னைவிட இரண்டு மடங்கு அதிக வயதுடைய நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பது அபத்தமாக இருந்ததாம். அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்ததால் அம்மாவாக நடித்தது பெரிய விஷயமாக தெரியவில்லை.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு விஜய், விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்டோரின் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக நடிப்பதற்காக அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இதற்கெல்லாம் வரலாறு படம் தான் காரணம். அந்த படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்காமல் போயிருந்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் தான் தன்னை தேடி வந்திருக்கும் என்று சமீபத்திய பேட்டியில் புலம்பினார்.

Also Read: தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டிக் கழிக்கும் அஜித் பட நடிகை.. கண்டிஷன் என்ற பெயரில் போடும் பட்டியல்

அது மட்டுமல்ல இந்த சின்ன வயதில் எதற்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுக்கிறீர்கள் என வந்தவர்களை எல்லாம் திட்டி அனுப்பி வைத்தாராம் கனிகா. அதன் பிறகு சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த கனிகா இப்போது மறுபடியும் சீரியலில் நடிக்க துவங்கி விட்டார்.

இவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், எதிர்நீச்சல் சீரியலில் இப்போது 55 வயது உடைய குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவிற்கு மனைவியாக  நடிப்பது பெருசா தெரியல, ஆனால் அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தது தான் பெருசா தெரியுதா என்று தல ரசிகர்கள் கனிகாவை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: தூங்கு மூஞ்சி அருணை விட கரிகாலன் எவ்வளவோ பெட்டர்.. குணசேகரன் கையில் கிடைத்தால் கொத்துக்கறி தான்

- Advertisement -

Trending News