வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் யாரும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு எபிசோடும் என்ன நடக்கிறது என்று புரியாத புதிராக இருக்கிறது. ஆதிரை திருமணம் எப்படியும் அருண் உடன் நடந்திடும் என்ற நம்பிக்கையில் ஆதிரை மட்டுமில்லாமல் நாமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் குணசேகரன் நினைத்தபடி ஆதிரை திருமணத்தை நடுரோட்டில் கரிகாலனை வைத்து முடித்து விட்டார். இதை பார்க்க கொஞ்சம் முட்டாள்தனமாகத் தான் இருக்கிறது. இப்படி வலுக்கட்டாயமாக அதுவும் கொடுமையாகவும் திருமணம் நடக்குமா? சீரியலாக இருந்தால் கூட ஒரு நியாயம் வேண்டாமா? அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் இப்படி நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று பார்ப்பவர்கள் நெகட்டிவ் ஆக அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: சுவாரசியம் குறையும் எதிர்நீச்சல்.. குணசேகரன் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்

இதிலும் படித்த மருமகள்கள் அங்கே மூன்று பேர் இருக்கும் பொழுது இதை தடுக்க அவர்களால் முடியாமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். உடல் பலம் இல்லை என்றால் கூட மூளையை யோசித்தால் எப்படியாவது தடுத்து இருக்கலாம். பாவம் ஆதிரை இவர்களை கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம். இதற்கடுத்து யாரை நம்பினாலும் பிரயோஜனம் இல்லை என்று துணிச்சலாக ஆதிரை களத்தில் இறங்கி விட்டார்.

அதாவது ஆதிரை கரிகாலன் கல்யாணமே எப்படி நடந்தது என்று யோசித்த நேரத்தில் அடுத்து ஷாக் கொடுக்கும் விதமாக, விருப்பமே இல்லாத தாலி எனக்கு தேவையே இல்லை என்று ஆதிரை தூக்கி எறிந்து விடுகிறார். இதை பார்ப்பதற்கு இது என்னடா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனையா என்று தலையில் அடித்துக் கொள்வது போல் இருக்கிறது.

Also read: குணசேகரனின் ட்ரிக்கே ஃபாலோ செய்யும் ஜனனி.. விறுவிறுப்பான ட்விஸ்ட்டுடன் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

அடுத்ததாக ஆதிரை இப்படி செய்வதை பார்த்த பிறகு குணசேகரன் அதிரடியாக இதை உடனே ரிஜிஸ்டர் பண்ணி விட வேண்டும் என்று முடிவு செய்து அனைவரையும் அங்கே கூட்டிப் போகிறார். அங்கே போன பிறகு ஆதிரை உங்களுக்கு எவ்வளவு வீம்பு இருக்கிறதோ அதில் பாதியாவது எனக்கு இருக்காதா என்று குணசேகரனை மிஞ்சும் அளவிற்கு சொர்ணாக்காவாக நடந்து கொள்கிறார்.

இதற்கிடையில் தன்னுடைய மகளின் வாழ்க்கை அவள் நினைத்தபடி நன்றாக நடந்து இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த குணசேகரன் அம்மாவிற்கு ஜனனி வந்து கொடுத்த பதில் ஏமாற்றத்தை அடைய வைக்கிறது. ஆனாலும் இதில் ஏதாவது ஒரு ட்விஸ்ட் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: எதிர்நீச்சல் சீரியல் நடிகையை துரத்தி துரத்தி அடித்த இயக்குனர் பாலா.. குணசேகரனை விட ரொம்ப கொடூரம்

- Advertisement -

Trending News