சன் டிவி விஜய் டிவியை விட தூள் கிளப்பும் ஜீ தமிழ்.. டிஆர்பி ரேட்டிங்கில் பிச்சு உதறும் 4 சீரியல்கள்

Z Tamil Serials: முன்னாடி எல்லாம் சீரியல் என்றால் அது சன் டிவி மட்டும் தான் என்று மக்கள் இதை மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் இதற்குப் போட்டியாக விஜய் டிவி வந்த பிறகு அதில் உள்ள நாடகத்தையும் இப்ப இருக்கிற தலைமுறைகள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இந்த இரண்டு சேனல்களும் போட்டி போட்டு வரும் நிலையில் இதற்குப் போட்டியாக ஜீ தமிழும் களமிறங்கி விட்டது.

அந்த வகையில் ஜீ தமிழில் வருகிற நாடகங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்து விட்டது. இதற்கிடையில் ஒரு நாடகத்தில் விளம்பரம் போடும்போது இன்னொரு நாடகத்தை பார்க்கலாம் என்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி விளம்பரம் போடும்போது பார்க்க ஆரம்பித்த நாடகங்கள் நல்லா இருப்பதால் தொடர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டார்கள்.

சாறு போட்ட பிளானை தவிடு பொடியாக்கும் மாயா

அந்த வகையில் இப்பொழுது சன் டிவி மற்றும் விஜய் டிவி விட ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் சூப்பர் மாஸாக போய்க்கொண்டிருக்கிறது. அது என்னென்ன சீரியல்கள் என்று பார்க்கலாம்.

அண்ணா: சும்மா கதையை ஜவ்வு மாதிரி இழுத்து அடிக்காமல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று அண்ணா சீரியலில் சண்முகம் பட்டையை கிளப்பி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பரணி, தான் புகுந்த வீட்டிற்கு பக்க பலமாக இருந்து அப்பா பண்ண அட்டூழியங்களை எல்லாம் வெட்ட வெளிச்சமாக போடும் திட்டத்தில் வெற்றியும் பெற்று விட்டார்.

அந்த வகையில் இனி சவுந்தர பாண்டியன் இருக்கும் இடம் தெரியாமல் ஒவ்வொரு நாளும் சண்முகம் மற்றும் பரணி இடம் சிக்கி சின்னபின்னமாகப் போகிறார். தர்மகர்த்த பதவியில் அப்பாவுக்கு எதிராக நின்னு ஜெயித்த பரணி. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு போட்டு கொண்டாடிய சண்முகம். இதை பார்க்க முடியாமல் தெறித்து ஓடிய சவுந்தர பாண்டியன் என்று ஒவ்வொரு காட்சிகளுமே கைத்தட்டலை பெற்று வருகிறது.

கார்த்திகை தீபம்: தீபாவின் தோழி ரம்யா எந்த அர்த்தத்தில் பழகுகிறார் என்று தெரியாமல் ரம்யா போட்ட சதியில் தீபா சிக்கிக் கொள்வாரா என்று கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் அதற்குள் ரம்யா பற்றி உண்மையை தெரிந்து கொள்ள கார்த்திக் முயற்சி எடுப்பாரா? ரம்யாவிடம் இருந்து தீபாவை காப்பாற்றுவாரா என்பது பல சுவாரசியமான கதைகளுடன் கதை நகர்ந்து வருகிறது.

இதயம்: ஆதி மற்றும் பாரதிக்கு கல்யாணம் ஆன நிலையில் இவர்களுக்குள் எப்படியாவது பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கும் குடும்பத்திலிருந்து பத்தடி தூரத்துக்கு சென்று பாரதியுடன் கைகோர்க்க ஆதி கிளம்பிவிட்டார். ஆனாலும் அந்த இடத்தில் இரண்டு பேரையும் தீர்த்து கட்ட வேண்டும் என்று சுவேதா, அப்பாவிடம் சொல்லி அதற்கேற்ற ஒரு பிளானை போட்டு இருக்கிறார். ஆனால் ஆதிக்கு என்ன பிரச்சனை ஆனாலும் முதல் ஆளாக வந்து நிற்பது வாசு. அந்த வகையில் மறுபடியும் வாசு அவதாரம் எடுத்து ஆதியை காப்பாற்ற போகிறார்.

சந்தியா ராகம்: கார்த்திக் தனது அத்தையின் சூழ்ச்சியால் தனத்தை நம்ப வச்சு ஏமாற்றி வருகிறார். எப்படியாவது ரகுராமை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தனத்தின் வாழ்க்கையை துருப்பு சீட்டாக கார்த்திக் பயன்படுத்தி விட்டார். அந்த வகையில் தனத்தின் பிறந்தநாளை தனியாக கொண்டாட வேண்டும் என்று சொல்லி வீட்டில் இருப்பவர்களிடம் ஏமாற்றி கூட்டிட்டு வந்து விட்டார். ஆனால் இந்த உண்மை மாயாவுக்கு தெரிந்த பின்பு சாரு போட்ட பிளானில் இருந்து தனத்தை காப்பாற்றி விடுவாரா என்று ஆர்வமாக பார்க்கும் அளவிற்கு கதை போய்க் கொண்டிருக்கிறது.

சன் டிவியுடன் போட்டி போட்டு வரும் விஜய் டிவி சீரியல்கள்

Next Story

- Advertisement -