ஜெட் வட்டி போல் சம்பளத்தை ஏத்தும் யோகி பாபு.. 8 மணி நேரத்திற்கு மேல வாங்கும் மின்னல் வட்டி

Comedian Yogobabu: தான் ஏற்கும் கதாபாத்திரம் எதுவாக இருப்பினும் அதை சிறப்புற நடித்துக் கொடுப்பதில் வல்லவர் யோகி பாபு. அவ்வாறு இருக்க, சமீப காலமாய் இவர் போடும் விதிமுறைகள் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தன்னை குணச்சித்திர நடிகராகவும் மற்றும் காமெடியனாகவும் இவர் ஏற்ற எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டுள்ளார். மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ஹீரோ மெட்டீரியலுக்கான லுக் இல்லாத 5 நடிகர்கள்.. கொஞ்சம் கூட செட்டே ஆகாதுன்னு நினைத்த தனுஷ்

அவ்வாறு தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் இவர் சமீப காலமாக அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். தற்பொழுது தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதால் யோகி பாபு காட்டில் மழை பெய்து வருகிறது.

டிமாண்டை காரணம் காட்டி, தன் மார்க்கெட்டை உயர்த்தி வரும் இவர் படத்தில் நடிக்க இப்பொழுதெல்லாம் நாள் சம்பளம் தான் வாங்குகிறாராம். மேலும் இவரின் கால்ஷீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், தற்பொழுது ஷிப்ட் போட்டு வேலை செய்து கொண்டு வருகிறாராம்.

Also Read: வேகம் எடுக்கும் தனுஷ் 50.. இவ்வளவு நடிகர்களா?. தெறிக்க விட்ட சம்பவம்

அவ்வாறு கிடைக்கும் படங்களை ஏற்கும் இவர் டைமிங் போட்டு வேலை பார்த்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஏழு மணிக்கு வந்தால் இரண்டு மணி வரை ஒரு ஷிப்ட் என, அதன்பின் நடிக்க மறுத்து எஸ்கேப் ஆகி விடுகிறார். அதையும் மீறி 2 மணிக்கு மேல் ஏதாவது படப்பிடிப்பு இருந்தாலும் அதை ஏற்க மறுக்கிறாராம்.

மீறியும் கட்டாயப்படுத்தினால் கால் மணி நேரத்திற்கு 15 லட்சம் வரை சம்பளம் கேட்கிறாராம். இவர் போடும் இத்தகைய கண்டிஷன்களை கேட்கவே வியப்பாக இருந்தாலும் அது தான் நிதர்சனமான உண்மை. இதை பழைய பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Also Read: புகழின் உச்சி, இளையராஜாவை காலி செய்த பாலச்சந்தர் எடுத்த விபரீத முடிவு.. வரலாற்றை திரும்பி பார்க்க செய்த சம்பவம்

Next Story

- Advertisement -