வேகம் எடுக்கும் தனுஷ் 50.. இவ்வளவு நடிகர்களா?. தெறிக்க விட்ட சம்பவம்

Actor Dhanush: பல படங்களில் படப்பிடிப்பை மேற்கொள்ளும் தனுஷ் பிசியாக இருந்து வருகிறார். அவ்வாறு இவர் நடிப்பில் உருவாகும் தனுஷ் 50 படத்தில், தெறிக்க விட போகும் எதிர்பாராத சம்பவத்தை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

பன்முக திறமை கொண்ட தனுஷ் முன்னணி கதாநாயகனாக இடம்பெற்று மாஸ் காட்டிய படங்கள் ஏராளம். அவ்வாறு தன் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஒவ்வொரு படங்களுக்கு ஏற்றவாறு அக்கதாபத்திரமாகவே மாறி நடிக்கும் வல்லமை கொண்டவர்.

Also Read: விக்னேஷ் சிவனால் பறிபோன நிம்மதி.. நயன்தாராவை சுற்றும் சொத்து பிரச்சனை

மேலும் அருண் மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்பொழுது இவரின் அடுத்த படமான தனுஷ் 50 எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

நாளுக்கு நாள் வெளியாகும் தகவலை கொண்டு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து முக்கிய பிரபலங்களான எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், அபர்ணா பாலமுரளி, தசரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்ற நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Also Read: நட்புக்காக கேஜிஎஃப் ஹீரோ செய்யும் வேலை.. ரஜினியை கௌரவ படுத்தியவர்களுக்கு யாஷ் செய்த நன்றி கடன்

மேலும் விக்ரம் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று சிறப்புற நடித்த காளிதாஸ் ஜெயராம் இப்படத்திலும் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளர் என்பது கூடுதல் சிறப்பை கூட்டுகிறது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் கேங்ஸ்டர் படம் எனக் கூறப்படும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். மேலும் பார்த்து பார்த்து பிரபலங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய்யின் லியோ படத்தை போலவே, பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்தே தனுஷ் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மொட்டை அடித்து உள்ளாரோ என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Also Read: சிம்புவின் சவடாலாம் கமல் கிட்ட செல்லாது.. பூதாகரமாய் மாறிய சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்