புகழின் உச்சி, இளையராஜாவை காலி செய்த பாலச்சந்தர் எடுத்த விபரீத முடிவு.. வரலாற்றை திரும்பி பார்க்க செய்த சம்பவம்

Director Balachander: தன் பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இளையராஜா. அவ்வாறு புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த இவரை காலி செய்ய, பாலச்சந்தர் எடுத்த விபரீத முடிவை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சுமார் 50 வருட அனுபவத்தைக் கொண்ட பாலச்சந்தர் இயக்கிய எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டது. அவ்வாறு கருத்துள்ள படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராய் வலம் வந்தவர். மேலும் இவர் காலத்தில் தான், தன் பாட்டாலும், இசையமைப்பாளும் மக்களின் பேராதரவை பெற்றவர் இளையராஜா.

Also Read: சப்பானி கமலை பார்த்து மிரண்ட 2 நடிகர்கள்.. 22 வயசுலயே உலக நாயகன் அந்தஸ்தை பெற்ற ஆண்டவர்

ஒரு படம் வெளிவருமாயின் இவர் பாடல்கள் இடம்பெற போகிறதா என்று தெரிந்து கொண்டுதான் படம் பார்க்கவே வருவார்கள். இவரின் பாடல்கள் படத்தில் இருக்கு என்பதை தெரிந்து, படங்களை வாங்க முன்வந்த விநியோகஸ்தர்களும் உண்டு. அவ்வாறு தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் ஆகியோரின் முக்கிய பிரபலமாக திகழ்ந்தவர் இளையராஜா.

அவ்வாறு புகழின் உச்சியில் இருந்த இளையராஜாவை சற்றும் சீண்டி பார்க்காத ஒரே இயக்குனர் பாலச்சந்தர் தான். போட்டாப்போட்டி போட்டுக் கொண்டு இவரின் கால்ஷீட் கிடைக்க ஏங்கிய இயக்குனர்கள் இடையே சற்றும் மாறாய் தன் கதைக்கேற்ற வேறு இசையமைப்பாளர்களை வைத்து வெற்றி கண்டவர் பாலச்சந்தர்.

Also Read: மீண்டும் களமிறங்கும் தமிழா தமிழா.. கரு. பழனியப்பனை கழட்டிவிட்டு தொகுத்து வழங்கப் போவது இவர்தான்

அவ்வாறு 90 காலகட்டத்தில் அழகன், வானமே எல்லை, டூயட் போன்ற தொடர் வெற்றிகளை, இளையராஜா இசையமைப்பு இல்லாமல் மரகதமணி, தேவா, ஏ ஆர் ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களை வைத்து படம் இயக்கி வரலாற்றை திரும்பிப் பார்க்க செய்தார்.

அவ்வாறு இளையராஜாவிற்கு நிகராக, இவர்கள் இசையமைப்பின் மாபெரும் வெற்றியை கண்டார். இதுபோன்று உலகமே போற்றும் இளையராஜாவின் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்த இவர் சிந்து பைரவி படத்தில், அப்படத்தின் கதை கேட்ப இளையராஜாவை இசையமைக்க சொல்லி அவர் வாயால் இதுபோன்ற வாய்ப்பை இதுவரை எந்த இயக்குனரும் தரவில்லை என கூற செய்தாராம் பாலச்சந்தர்.

Also Read: சினிமா ஆசையை விட்டுவிட்டு ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் விஜய்.. சீக்ரட்டாய் நடக்கும் ஒத்திகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்