திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

META வைத்து ரெண்டே செகண்டில் AI போட்டோ ரெடி.. என்ன கேட்டாலும் தட்டி தூக்கும் வாட்ஸ் அப் சேவை

Whatsapp Meta AI: கையில பணம் இல்லாமல் கூட இருப்பாங்க, ஆனா இந்த போன் இல்லாம யாராலயும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன் மக்களை அடிமையாக்கி விட்டது. அதற்கு ஏற்ற மாதிரி தொழில்நுட்பம் வளர வளர ஒரு போன் கையில் எடுத்துட்டு போனா போதும் நினைச்சதை வாங்கிடலாம் என்று சொல்வதற்கு ஏற்ப பர்ஸ் பணத்தை மறந்து விட்டோம். அந்த அளவிற்கு போனில் பல நன்மையான விஷயங்கள் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் முக்கால்வாசி நேரத்தை செலவழிப்பது சோசியல் மீடியாவில் தான். அதற்கு ஏற்ற மாதிரி whatsapp, Twitter, facebook, instagram போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருவது போல தற்போது AI சார்ந்த தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

2 நொடியில் வாட்ஸ் அப்பில் போட்டோ ரெடி

அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் ஆரம்பத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் META AI வசதியை அறிமுகப்படுத்தினார்கள். தற்போது அங்க சுத்தி இங்க சுத்தி வாட்ஸாப்பிலும் கொண்டு வந்து விட்டார்கள். அந்த வகையில் whatsapp மூலம் இரண்டே நிமிடத்தில் நமக்கு தேவையான போட்டோக்களை எடுத்துக் கொள்ளலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp-யை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனால் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ற மாதிரி வாட்ஸப் நிறுவனம் அவ்வப்போது புதுசு புதுசாக அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக தற்போது வாட்ஸ் அப்பில் AI வசதியை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எளிமையாக தேவையான போட்டோக்களை உருவாக்க முடியும்.

வாட்ஸ் அப்பில் AI காண ப்ளூ சர்க்கிளை(Blue Circle) கிளிக் செய்து imagine என்று டைப் செய்து space விட்டு நமக்கு தேவையானதை டைப் செய்தால் இரண்டு நொடிகளில் அந்த புகைப்படம் வந்துவிடுகிறது.

பயன்படுத்தும் முறை: இந்த மெட்டா AI வசதியை யூஸ் செய்வது ரொம்பவே ஈஸி. வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்தால், அதில் கீழே வலது புறம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் வட்டம் தெரியும். அதை கிளிக் செய்தால் போதும் ஈலியாக நாம் மெட்டா ஏஐ மாடலுடன் சாட் செய்யலாம்.

வாட்ஸ்அப் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் தளங்களிலும் இதே வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாம். தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, என்று 13 மொழிகளில் மட்டுமே மெட்டா AI வேலை செய்கிறது. விரைவில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News