வாட்ஸ் அப்பில் புதுசாக வரும் நீல நிற பட்டன்.. சாட் ஜிபிடி-யை மிரளவிடும் மெட்டா AI

Meta AI: ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப புதுமையான டெக்னாலஜி வளர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அது என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே நாம் அதை பயன்படுத்தி அடிக்ட் ஆகி விடுகிறோம். தற்போது ஒவ்வொருவரிடமும் அத்தியாவசிய தேவையாக இருப்பது மொபைல் தான். அதுவும் அதில் இருக்கும் சில APP பற்றி தெரிகிறதோ இல்லையோ அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள் என்று நாமும் பயன்படுத்துகிறோம்.

அப்படித்தான் மொபைலில் வாட்ஸ் அப் என்னும் ஒரு சமூக வலைதளத்தில் அதிகம் பேர் பயன்பட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதுசாக வாட்ஸ் அப்பில் நீல நிற பட்டன் ஒன்று வர ஆரம்பித்திருக்கிறது. அது என்னவென்று புதுசாக வந்திருக்கும் மெட்டா AI பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக வர இருக்கும் Meta AI

மெட்டா Ai என்றால் என்ன: வாட்ஸ் அப்பில் இருந்து கேள்விகளை கேட்கவும் ஆலோசனைகளை பெறவும் மெட்டா AI பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் வாட்ஸ் அப்பில் சேட் பண்ணும் பொழுது மற்றவர்கள் மெட்டா ஐ காண செய்திகளை பதில்களையும் நம்மளால் பார்க்க முடியும். மெட்டா AI என்பது மெட்டா வழங்கப்படும் மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு விருப்பமான சேவையாக கருதப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது வரையறுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆங்கிலத்தில் மட்டுமே தற்போது வரை இருக்கிறது. இதை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மெட்டான் நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாட்பாட்டான மெட்டா, Meta AI நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. இதை வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் பயன்படுத்துபவர்கள் விரைவில் பயன்படுத்தலாம்.

பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். தற்போது வரை இந்தியாவில் ஆங்கில மொழியை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமீபத்தில் வந்த AI லாமா-3 (Llama 3) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த மெட்டா AI உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த காட்பாட்டினை சர்வதேச அளவில் மெட்ட அறிமுகம் செய்தது இருந்தும் இந்த பயன்பாட்டை இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தல் காரணத்தால் தள்ளி வைத்தது. கடந்த வாரம் கூகுள், Gemini சாட்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதை அடுத்து மெட்டாவும் தனது AI சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் மற்ற சாட்பட்டன்களை போல இதன் மூலமாகவும் பயனாளர்கள் பல்வேறு விஷயங்களை மேற்கொள்ளலாம். இதை வைத்து மின்னஞ்சல் எழுத, கவிதை மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF போன்ற விஷயங்களை உருவாக்க இது மிகவும் பயன்பெற போகிறது. இது அனைத்தையும் whatsapp, facebook பக்கத்தில் இருந்து உருவாக்க முடியும். இதனை தொடர்ந்து ஜூன் 24ஆம் தேதி முதல் இந்த AI இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது சாட் ஜிபிடி க்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

AI டெக்னாலஜி என்றால் என்ன

Next Story

- Advertisement -