சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

AI டெக்னாலஜியால் 12,500 ஊழியர்களை தூக்கிய கம்பெனி.. எதிரியாக மாறியதா இந்த தொழில்நுட்பம்.?

AI Technology: டெக்னாலஜி வளர வளர ஆபத்துகளும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வருகிறது என்று பொதுவாக பலரும் புலம்புவதை நம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் அது கண்கொண்டு பார்க்கும் வகையில் தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வளர்ந்து வரும் AI டெக்னாலஜியால் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறி இருக்கிறது.

எப்படி எந்திரன் படத்தில் வசீகரன், சிட்டியை கண்டுபிடித்து மனிதன் பார்க்கக்கூடிய வேலையை ரோபோ செஞ்சால் எப்படி இருக்கும் என்று கொண்டு வந்தார். ஆனால் கடைசியில் அந்த ரோபோ அனைவருக்கும் மிகப்பெரிய தொல்லை கொடுக்கும் வில்லனாக மாறிவிட்டது.

AI டெக்னாலஜியால் அவதிப்படும் ஊழியர்கள்

அதே போல தான் வேலைப்பளுவை குறைப்பதற்காக மக்கள் AI டெக்னாலஜியை உருவாக்கி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த AI டெக்னாலஜியை மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.

அந்த வகையில் பல பிரபல கம்பெனிகளில் AI டெக்னாலஜி மூலமாக வேலை ஈஸியாகவும் துல்லியமாகவும் கணக்கிட முடிகிறது. அப்புறம் ஏன் அதிகமான ஊழியர்கள் என்று வேலை பார்ப்பவர்களை குறைத்துக் கொண்டே வருகிறார்கள்.

அதிலும் இந்த ஆண்டு பொருளாதார நிலையை சீரமைக்கும் விதமாக ஆட்டோமேஷன் மறு சீரமைப்பு மற்றும் அதிகமான செலவினங்களை குறைத்துக் கொண்டு இந்திய முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை குறைப்புகளை செய்து வருகிறார்கள்.

அதில் இன்டெல், டெல், கூகுள், இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற பல கம்பெனிகளும் பாதி ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறார்கள். அதிலும் இன்டெல் கம்பெனி சமீபத்தில் தான் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதேபோல் தற்போது டெல் கம்பெனியில் கிட்டத்தட்ட 12,500 ஊழியர்களை தூக்கி விட்டது.

இப்படியே போனால் மக்களுக்கு வேலை இல்லாமல் திண்டாட்டம் ஏற்படும் வகையில் அதிநவீன டெக்னாலஜி ஆன AI தொழில்நுட்பம் அனைத்து பக்கங்களிலும் ஜம்பமாக இருக்கப் போகிறது. அந்த வகையில் மக்களுக்கு மிகப்பெரிய எதிரியாக AI டெக்னாலஜி வளர்ந்து வருகிறது.

- Advertisement -

Trending News