AI இல்லாத டி ஏஜிங்,, ஹலிதா ஷமீமின் புது முயற்சி எப்படி இருக்கு.? மின்மினி திரை விமர்சனம்

Minmini Movie Review: வழக்கமான மசாலா படங்களாக இல்லாமல் புதுமையான முயற்சியில் உருவாகும் படங்கள் ரசிகர்களை வெகு சீக்கிரம் சென்றடைந்து விடுகிறது. அப்படி ஒரு புது முயற்சியை எட்டு ஆண்டுகள் காத்திருந்து செய்திருக்கும் ஹலிதா ஷமீமின் மின்மினி இன்று வெளியாகி உள்ளது.

எஸ்தர் அனில், கௌரவ் காளை, பிரவீன் கிஷோர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா இசையமைத்துள்ளார். சிறு வயதில் தொடங்கி இளம் வயதினராக மாறும் கதாபாத்திரங்களுக்காக காத்திருந்து இப்படத்தை படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

2015ல் ஆரம்பிக்கப்பட்ட படம் அதன் பிறகு 2022 இல் தொடங்கி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எட்டு வருட காத்திருப்பின் மூலம் ஏ ஐ இல்லாத டி ஏஜிங் முயற்சிதான் இப்படம். விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்த மின்மினி எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

கதைகளம்

சிறு வயதிலேயே நண்பர்களாக இருக்கும் பாரி, சபரி இருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது பாரிக்கு இமயமலையில் பைக் ரைடு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அதே போல் சபரிக்கு ஒரு சிறந்த ஓவியராக வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது.

இதில் எதிர்பாராத விதமாக பாரிக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது அவருடைய லட்சியத்தை நிறைவேற்ற சபரி, பிரவீனா ( எஸ்தர் அனில்) இருவரும் களம் இறங்குகிறார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? பாரிக்கு என்ன ஆனது? பிரவீனா யார்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மின்மினி.

நிறை குறைகள்

எட்டு வருட காத்திருப்பின் புது முயற்சி என்றதுமே படத்தை பார்க்கும் போது புது புத்துணர்வு வந்து ஒட்டிக்கொள்கிறது. அதை அப்படியே தக்கவைத்து நல்ல ஒரு பீல் குட் படத்தை பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அடிதடி வெட்டு குத்து ரத்தம் என இல்லாமல் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளும் இமயமலையின் அழகையும் நமக்கு காட்டி இருக்கின்றனர். படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதைக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

பாபநாசம் படத்தில் குட்டி பாப்பாவாக பார்த்த எஸ்தர் அனில் ஸ்கோர் செய்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஒளிப்பதிவு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. இந்த மாதிரி இடங்களுக்கு எல்லாம் நிச்சயம் ஒரு நாள் செல்ல வேண்டும் என்ற ஆசையையும் ஏற்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

மலைகள், பனி படர்ந்த சாலைகள், டென்ட், ரிசார்ட் போன்ற அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதற்கு ஏற்றார் போல் கதையோடு பயணிக்கும் பின்னணி இசை ரசிக்க வைத்துள்ளது. காட்சிகளை பொறுத்தவரை சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் கதையோட்டம் அதனால் பாதிக்கப்படவில்லை.

அதனால் படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம். ஏலே சில்லு கருப்பட்டி, பூவரசம் பீபீ போன்ற படங்கள் மூலம் நம்மை கவர்ந்த ஹலிதா ஷமீம் மின்மினி மூலம் மின்னி இருக்கிறார்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்

Next Story

- Advertisement -