நாட்டாமை உதயநிதி மூலமா சைலன்டா நடந்த செட்டில்மெண்ட்.. வெள்ளைக்கொடி வேந்தனாக மாறிய சூரி

Vishnu Vishal and Soori’s problem was resolved smoothly when udayanidhi intervened: வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்துள்ள சூரி  காமெடியனாக அறிமுகமாகி நகைசுவையில் தடம் பதித்த கையோடு தற்போது நாயகனாகவும் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் சூரி.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் சூரியுடன் இணைந்து நாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால், இருவரும் குள்ளநரி கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதன் பின் விஷ்ணு விஷாலின் சார்பில் “கவரிமான் பரம்பரை” என்ற படத்தில் நடிக்க சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டார்

இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தையும் முன்னாள் டிஜிபிமான ரமேஷ் குடவாலா மீது சம்பள பாக்கி, பண மோசடி மற்றும் நில மோசடி தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றமோ ஆறு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Also read: அந்த இயக்குனரை நம்பி நடிச்சது தப்பா போச்சு.. அழுது புலம்பும் விஷ்ணு விஷால்

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்து வந்தனர். மேலும் உதயநிதி  மற்றும் முதல்வர் என மாறி மாறி கம்ப்ளைன்ட் கொடுத்தார் சூரி. அப்போதைய நிலையில்  திரைத்துறையில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு தற்போது சுமூகமான முடிவுக்கு வந்துள்ளது.

ஆம் விஷ்ணு விஷாலின் காட் பாதர் என சொல்லக்கூடிய அமைச்சர் மற்றும் நடிகருமான உதயநிதி மூலமாக சூரிக்கு ஒரு சைலண்ட்டான செட்டில்மெண்ட் வந்துள்ளது. அதனால் அமைதியாகியுள்ளார் சூரி. லால் சலாம் வெளியிட்டின் போது மனம் திறந்த விஷ்ணு விஷாலிடம் சூரியை பற்றி கேட்டபோது சமீபத்தில் நானும் சூரியும் சந்தித்து பேசி பிரச்சனையை சரி செய்து கொண்டோம் என்று தெரிவித்துள்ளார்.

நட்புக்குள் பிரச்சனை வரக்கூடாது பிரச்சனை வந்தா மூன்றாவது நபர் வரக்கூடாது என்ற வாழ்க்கை பாடத்தை கற்றதாகவும் மூணாவது நபரின் மூலமாகவே பிரச்சனை பூதாகரமானது என்றும் சைலன்டாக அந்த மூன்றாவது நபரை தாக்கி இருந்தார் விஷ்ணு. இனி சூரி வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் பழையபடி இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்போம் என்று பழம் இட்டுள்ளார் விஷ்ணு விஷால். ஆனால் சூரி தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.

Also read: ரொம்ப பிஸின்னு ஆட்டிட்யூட் காட்டும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சூரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்