வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தங்கலான் படத்திற்கு பின் அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. மகனால் தந்தைக்கு அடித்த ஜாக்பாட்

தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என சியான் விக்ரம் மெனக்கெடுவதனாலேயே அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் அவருடைய சமீபத்திய படங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், எப்படியாவது ரசிகர்கள் விரும்பும் படி ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என வெறிகொண்டு தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் விக்ரம் ஆதிவாசி போன்ற வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இதனால் படத்தை உலக திரைப்படமாக வெளியிடுவதற்காக எல்லா மொழிகளிலும் டப் செய்ய உள்ளனர்.

Also Read: விக்ரமின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த போகும் 2023.. அடுத்தடுத்த ரிலீஸ் ஆகப்போகும் 4 படங்கள் 

எனவே இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான இயக்குனரை விக்ரம் தற்போது லாக் செய்துள்ளார். இது அவருடைய மகன் துருவ் விக்ரமால் அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏனென்றால்  மாரி செல்வராஜ் அடுத்து துருவ் விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரிக்கிறார்.

இதற்கான விவாதங்களில் அடிக்கடி துருவ் விக்ரம் வீட்டிற்கு மாரி செல்வராஜ் செல்லும் பொழுது அந்த சமயத்தில் விக்ரமும் கூட இருக்கிறார். இதனால் மாரி செல்வராஜ் சொல்லும் கதைகளை கேட்ட விக்ரம், எனக்கும் ஒரு கதை சொல்லுங்கள் நாம் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறி இருக்கிறார்.

Also Read: 5 வருடங்களாக கடன்காரர்களின் பிடியில் இருந்த ரொமான்டிக் இயக்குனர்.. கடைசியில் விக்ரமுக்கு வச்ச செக்

இதனால் மாரி செல்வராஜூம் விக்ரமிற்காக ஒரு கதையை கூறியிருக்கிறார். இதைக் கேட்டவுடன் அடுத்த படத்தை நீங்கள் தான் செய்ய வேண்டும் என்று உடனே கூறிவிட்டார் விக்ரம். இதனால் துருவ் விக்ரம் படத்தை முடித்து விட்டு உடனடியாக விக்ரம் படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அதற்கெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் .

நீங்கள் படம் இயக்க வந்தால் மட்டும் போதும் என்று கூறிவிட்டாராம். அந்த அளவுக்கு விக்ரமிற்கு இந்த படத்தின் கதை பிடித்துள்ளது. விக்ரம் பெரிய பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு இது மாதிரி நல்ல நல்ல கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்களின் படத்தில் நடிக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Also Read: அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தங்கலான் பட நடிகை.. ரசிச்சு ருசிச்சு போட்டோ எடுத்தது நம்ம சியானா!

- Advertisement -

Trending News