அரசியலால் சினிமாவுக்கு வைக்கும் முற்றுப்புள்ளி.. விஜய் கடைசியாக நடிக்கும் படம்

Actor Vijay: விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் தான் அவரது படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ரிலீஸ் ஆகியவற்றில் அரசியல் பிரபலங்களால் சிக்கலை சந்தித்து வருகிறார் என கூறப்படுகிறது. பொதுவாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் இரட்டை சவாரி செய்ய முடியாது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூட அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதேபோல் தான் விஜய்யும் அரசியலுக்கு வந்தவுடன் சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறாராம். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இப்போது லியோ படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் வெளியாக இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளது.

Also Read : ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

அதற்குள்ளாகவே விஜய் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். மற்றொருபுறம் அடுத்ததாக தளபதி 68 படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. வாரிசு படத்தைப் போல இந்த படத்திலும் எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் தளபதி 68 படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் 2026 ஆம் ஆண்டு தான் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் இதில் தான் விஜய் இறங்க இருக்கிறார். ஆகையால் தளபதி 68 படம் அடுத்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். எனவே விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் தளபதி 69 தான்.

Also Read : 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்

இந்த படத்தை அட்லீ அல்லது கௌதம் மேனன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மதில் மேல் பூனையாக தான் விஜய் இருந்து வருகிறாராம். அதாவது தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகிவிட்டால் சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விடலாம் என்ற முடிவில் இருக்கிறார்.

அப்படி தேர்தல் விஜய்க்கு கை கொடுக்கவில்லை என்றால் மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கிவிடுவாராம். ஆனாலும் அரசியலில் எப்படியும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்போது விஜய் பல வேலைகள் செய்து வருகிறாராம். அதுவும் குறிப்பாக இப்போது பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தான் விஜய்யின் முதல் டார்கெட் ஆக இருக்கிறது.

Also Read : மறைமுகமாக அஜித், விஜய் செய்யும் தவறு.. மொத்த பித்தலாட்டமும் கல்லாவை நிரப்ப தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்