ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்

Vijay-Vijay Sethupathy: விஜய் சேதுபதி கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. அதிலும் அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜாவிற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் இவர் மிகவும் பதறிப்போன ஒரு சம்பவத்தை பற்றி காண்போம்.

அதாவது இவர் கமிட்டான ஒரு படத்தில் தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படகுழு முடிவு செய்திருக்கின்றனர். இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி பதறிப்போய் அந்த நடிகை ரொம்ப சின்ன பொண்ணு, எனக்கு மகள் மாதிரி என்று கூறியிருக்கிறார்.

Also read: 500 கோடி, 1000 கோடி வடையெல்லாம் இனி செல்லாது.. 7 முக்கிய முடிவுகளால் மிரளும் ரஜினி, விஜய்

மேலும் ஏற்கனவே நாங்கள் இருவரும் அப்பா மகளாக நடித்து இருக்கிறோம். அந்த பெண்ணுடன் எப்படி நான் டூயட் பாட முடியும் என்று கேட்டிருக்கிறார். இது பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் இதே போல் ஹீரோயின் விஷயத்தில் விஜய் மறுப்பு தெரிவிக்காமல் ஓகே சொல்லி இருப்பது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

லியோ படத்தை முடித்துள்ள அவர் அடுத்ததாக தளபதி 68 மோடுக்கு திரும்பி உள்ளார். அதற்கான பூஜை இன்று ஆரவாரமாக நடைபெற்ற நிலையில் இள வயது விஜய்க்கு ஜோடியாக 26 வயதான நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 68.. ஒன்று கூடும் ஜாம்பவான்கள், அரண்டு போன லோகேஷ்

49 வயதாகும் அவர் தன்னைவிட இவ்வளவு வயது குறைந்த நடிகையை ஜோடியாக்க எப்படி முடிவு செய்தார் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. என்னதான் ஹீரோக்கள் வயதே தெரியாமல் நடித்து வந்தாலும் சில சமயங்களில் இது போன்ற விஷயங்களில் கவனமாக இருந்து தான் ஆக வேண்டும்.

ஆனால் விஜய் இதைப் பற்றி யோசிக்காதது ஆச்சரியம் தான். இருப்பினும் இதற்கு பின் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த வகையில் லியோவை விட பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் தளபதி 68 ஆரம்பத்திலேயே மிகப்பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுக்கவும் தயாராகி வருகிறது.

Also read: வயித்துல அடிச்சு பிடுங்கிய 2 கோடியை வீதியில் இறைத்த லியோ டீம்.. எனக்கென்னன்னு ஜாலியா இருக்கும் தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்