சகட்டுமேனிக்கு நடிச்சிட்டு புலம்பித் தள்ளும் ஹீரோயின்.. விஜய் சேதுபதி செல்லத்துக்கு இப்படி ஒரு நிலைமையா

Actress in big Stress: விஜய் சேதுபதி வருடத்திற்கு 10 முதல் 12 படங்கள் நடித்து தள்ளிவிடுவார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பதால் இவரால் நிறைய படங்கள் நடிக்க முடிகிறது. வில்லன், ஹீரோ, கேமியோ என எந்த கேரக்டர் ஆனாலும் நெருங்கிய நட்பு வட்டாரத்துக்காக நடித்து வந்தார்.

இப்பொழுது கேமியோ ரோல் பண்ண மாட்டேன் என்று முடிவெடுத்து விட்டார். இவருக்கு போட்டியா வருடத்திற்கு 10 படங்கள் இல்லாவிட்டாலும் குறைந்தது 7 முதல் 8 படங்கள் நடித்த தள்ளும் ஹீரோயின், இப்பொழுது நடித்த எந்த படங்களும் ரிலீஸ் ஆகாமல் மன வேதனையில் புலம்பித் தருகிறார்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்அமைந்துவிட்டால் நடிகை கால் சீட் கொடுத்து விடுவார். இவர்கள் எப்படிப்பட்டவர்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் எடுப்பார்களா, எடுத்த படத்தை ரிலீஸ் செய்வார்களா என்றெல்லாம் அம்மணி யோசிப்பதில்லை. கதை நல்லா இருக்கிறது நடிக்கிறேன் என்று நடித்து வந்தார்.

இப்பொழுது நடித்து முடித்த பாதி படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. நடித்துக் கொண்டிருக்கும் படமோ பாதியில் நிற்கிறது, இப்படி ஹீரோயினுக்கு எந்த பக்கம் போனாலும் பிரச்சனை. இப்படி ஒரு ஹீரோயின் இருக்கிறார் என்பதையே மக்கள் மறந்து விட்டனர்.

விஜய் சேதுபதி செல்லத்துக்கு இப்படி ஒரு நிலைமையா

கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர்குலை நடுங்க என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் எதுவும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இது போக மலையாள மற்றும் கன்னட படங்கள் சூட்டிங்பாதியில் நிற்கிறது.

ஒரு காலத்தில் விஜய் சேதுபதியுடன் செம கெமிஸ்ட்ரியில் பின்னி பெடல் எடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்கள் இருவரும் டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூட செய்திகள் வெளிவந்தது. கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹிட்டான படம் எது என்றே தெரியவில்லை.

Next Story

- Advertisement -