கொடிகட்டி பறந்த விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா.? பிசினஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்ட படம்

Vijay Sethupathi: ஒரு கலைஞனுக்கு இருக்கக்கூடிய அனைத்து தகுதியுமே விஜய் சேதுபதிக்கு இருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் இவருக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடிய அளவிற்கு ஹீரோ மற்றும் வில்லனாகவும் நடித்து பெயர் வாங்கக்கூடிய திறமை இருக்கிறது.

அதனால் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று கொடிகட்டி பறந்தார். இடையில் சில படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ வாய்ப்பு கம்மியாக ஆரம்பித்து விட்டது.

இதனால் சரியான நேரத்தில் சுகாரித்துக் கொண்ட விஜய் சேதுபதி இனி முக்கியமான படங்களில் மட்டும் நெகட்டிவ் ரோலில் நடிப்பேன் என்று கூறிவிட்டார். அந்த வகையில் தற்போது ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த மெர்ரி கிறிஸ்மஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் யாவரும் வல்லவரே, விடுதலைப் இரண்டாம் பாகம், மகாராஜா போன்ற படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

கிடப்பில் கிடக்கும் விஜய் சேதுபதியின் 51வது படம்

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் 51 வது படமான “சத்தியம் பொய்” வியாபாரம் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்த படம் அந்த ஆண்டு இறுதிக்குள்ளயே படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். ஆனால் இன்னும் வரை இப்படம் மர்மமான முறையிலேயே கிடப்பில் கிடைக்கிறது.

அதாவது ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் ஆக்சன், காமெடி, காதல் போன்று கலவையான ஒரு கமர்சியல் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கும் தயாராக இருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிட முடியவில்லை. காரணம் இப்பொழுது வரை இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை.

இதனால் ரிலீஸ் பண்ணி நஷ்டத்தை பார்ப்பதற்கு பதிலாக அப்படியே கிடப்பில் கிடக்கட்டும் என்று ஒதுக்கி விட்டார்கள். ஒரு நேரத்தில் விஜய் சேதுபதி படம் என்றால் ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வாங்க தயாராக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது விஜய் சேதுபதியை யாரும் கண்டு கொள்ளாத நிலைமையில் பரிதாபத்தில் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்