50வது படம்ன்னு மொத்தத்தையும் ஆட்டைய போட்ட விஜய் சேதுபதி.. கௌரவத்துக்காக புர்ஜ் கலிபாவில் வைத்த டைம் பாம்

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. இந்த படம் சினிமாவில் தன் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என யோசித்து பற்பல விஷயங்களை செய்து வருகிறார் மக்கள் செல்வன். இப்பொழுது துபாயில் இவர் வைத்த வேட்டு தான் மொத்த கோடம்பாக்கத்தையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

குரங்கு பொம்மை இயக்குனர் நித்தின் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இது ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி செம பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார். மகாராஜா படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என மொத்த யூனிட்டும் பேசி வருகிறது.

இந்த படத்தில் முடி வெட்டும் பார்பராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் வீட்டில் பணம் திருடு போகிறது. அதனால் குதர்க்கமாக போலீஸ் ஸ்டேஷனில் லட்சுமியை திருடினார்கள் என கம்ப்ளைன்ட் கொடுத்து பிரச்சனை செய்வது போல் போல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள.

விஜய் சேதுபதி, “இது என் 50 தாவது படம் அதனால் எனக்கு கௌரவம் ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு பெரிய டைம் பாம் வைத்துள்ளார்”. துபாய் வரை சென்று கிலோ கணக்கில் அவர் தலையில் மிளகாயும் அரைத்துள்ளார்.

கௌரவத்துக்காக புர்ஜ் கலிபாவில் வைத்த டைம் பாம்

மகாராஜா படத்தின் பிரமோஷனுக்காக மொத்த படக்குழுவினர்களுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே புர்ஜ் கலிபாவில் இந்த படத்தை டிஸ்ப்ளே செய்கிறார்கள். அந்த இடத்தில் மூன்று நிமிடம் திரையிடுவதற்கு 75 லட்ச ரூபாய். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை இதை வெளியிட திட்டம் போட்டு வருகிறார்கள்.

புர்ஜ் கலிபா, துபாயில் உள்ள உயரமான கட்டிடம். அங்கே தான் விஜய் சேதுபதி தன் கௌரவத்திற்காக தயாரிப்பாளருக்கு பெரும் தொகையை செலவு வைத்துள்ளார். விஜய் சேதுபதி தன் சம்பளப் பணத்தில் இருந்து கொஞ்சம் கூட குறைக்கவில்லையாம்.

வில்லன் விஜய் சேதுபதியை ஹீரோவாக மாற்ற போராடும் சினிமா

- Advertisement -