வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மனோஜ் மூலம் ரோகினிக்கு பெரிய ஆப்பை வைக்கும் விஜயா.. குதூகலத்தில் கொண்டாடும் முத்து

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி பற்றிய உண்மையான விஷயங்கள் முத்து மற்றும் விஜயாவிற்கு தெரியவரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நினைப்பது ஒன்னு நடப்பது வேறு என்பதற்கு ஏற்ப முத்து மீனாவிற்கு பிரச்சனை வந்துவிட்டது. இது எப்பொழுது தான் சரியாகும் என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் ஒரு குதூகலகமான எபிசோடு வரப்போகிறது.

அதாவது மனோஜ் சமீபத்தில் பார்த்து வந்த சர்வர் வேலை கைவிட்டுப் போய்விட்டது. இவர் சர்வர் வேலை தான் பார்த்தார் என்று யாருக்கும் தெரியாத பட்சத்தில் மனோஜ்க்கு வேலை போய் விட்டது மட்டும் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. அடுத்து ரோகிணி, மனோஜை உடனடியாக வேலை தேடிக் கொள் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார்.

இதனால் மனோஜ், தன் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்க வேண்டும் என்று அலஞ்சு திரிஞ்சு ஒரு வேலையை கையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்புகிறார். வீட்டிற்கு வந்ததும் விஜயாவின் காதில் ஒரு சீக்ரெட்டை சொல்கிறார். சொன்னதும் விஜயா கொடுத்த ரியாக்ஷனை பார்த்தால் ஏதோ ஒரு குண்டத் தூக்கிப் போடப் போகிறார் என்பது போல் தெரிந்தது.

Also read: விஜயாவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட மீனா.. முத்துவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் ஆசை மனைவி

அதே மாதிரி மனோஜ் சொன்னது என்னவென்றால், எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று ரோகிணி மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி சொல்லிவிடுகிறார். அத்துடன் என்னுடைய படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற மாதிரி எனக்கு கனடாவில் வேலை கிடைத்திருக்கிறது என்று சொல்கிறார். உடனே இதைக் கேட்டு பூரித்துப்போன ரோகிணி அப்படியே மனோஜை கட்டிப்பிடித்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.

ஆனால் இங்குதான் ஒரு பெரிய ஆப்பு இருக்கிறது. அதாவது வேலை முக்கால்வாசி உறுதியாகிவிட்டது, ஆனால் அதற்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வேணும் என்றால் 14 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் பாஸ்போர்ட் விசா கிடைத்துவிடும் என்று சொன்னதும் ரோகிணி மூஞ்சியை பார்க்கணுமே, அப்படியே நமத்து போன பட்டாசு மாதிரி சுருங்கி போய்விட்டது.

இந்த கூத்தெல்லாம் பார்த்துக் கொண்டு முத்து மற்றும் அண்ணாமலை சந்தோஷத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார்கள். அத்துடன் இனி இது சம்பந்தமாக மனோஜ் செய்த ஒவ்வொரு காமெடியும் தினமும் பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே  முத்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், விஜயா மனோஜ்க்காக 14 லட்சம் ரூபாய் உங்க அப்பாவிடம் கேட்டு வாங்கி கொடு என்று ரோகினியை டார்ச்சர் செய்யப் போகிறார்.

Also read: தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

- Advertisement -

Trending News