ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தம்பி பேச்சைக் கேட்டு முத்துவை சரமாரியாக கேள்வி கேட்கும் மீனா.. விஜயா ஆசைப்படி பிரிய போகும் ஜோடி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, மச்சான் செய்த தவறுகள் அனைத்தும் மீனாவிற்கு தெரிய வந்துவிட்டால் ரொம்பவே வேதனைப்படுவார். அத்துடன் மொத்த குடும்பமும் சுக்கு நூறாக உடைந்து போய் விடுவார்கள் என்ற காரணத்திற்காக மீனாவின் தம்பி செய்த தவறுகளை மறைத்து விடுகிறார்.

ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மீனாவின் தம்பி தன் கையை இப்படி உடைத்து விட்டது மாமா தான் என்று சொல்லிவிடுகிறார். உடனே மீனா, மாமா எதுக்கு உன் கையே உடைக்கணும் நீ என்ன பண்ணினாய் என்று கேட்கிறார். அதற்கு மாமா கண்ணு மூக்கு தெரியாமல் குடித்துவிட்டு ஃபுல் போதையில் இருந்ததால் என்னை இப்படி அடித்து விட்டார் என்று சொல்லிவிடுகிறார்.

இது கேட்டு ஆக்ரோஷமான மீனா, தம்பிக்காக முத்துவிடம் பேசப் போகிறார். இதற்கு இடையில் முத்து மச்சான் தன்னை ரொம்ப அவமானப்படுத்தி பேசியதற்காக குடித்துவிட்டு கார் செட்டில் இருக்கிறார். அந்த நேரத்தில் மீனா உள்ளே நுழைந்து இப்ப குடிச்ச மாதிரி தான், அப்பொழுது குடித்துவிட்டு என் தம்பியை இப்படி அடித்தீர்களா என்று கேட்கிறார்.

Also read: அழகி பட்டத்தை வென்ற மகாநதி சீரியல் நடிகை.. உருகி உருகி காதலித்த காமெடி நடிகர் கருணாகரன்

அத்துடன் படிக்கிற பையன் கையை இப்படி உடைத்தால் அவருடைய வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசித்தீர்களா. இதுவரை குடித்துவிட்டு வெளியில் தான் ரவுடித்தனத்தை பண்ணிட்டு இருந்தீங்க. இப்போது என் தம்பியை இப்படி பண்ணிட்டீங்களா என்று கோபமாக பேசுகிறார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முத்துவும் பேசுகிறார்.

ஆனால் கடைசிவரை எதற்காக பண்ணினேன் என்ற உண்மையை மட்டும் மீனாவிடம் சொல்லவில்லை. இதனால் இவர்களுக்கிடையே சண்டை உருவாகிறது. அட்லீஸ்ட் நடந்த உண்மையை மீனாவிடம் மட்டுமாவது சொல்லி இருந்தால் பிரச்சனையை பெருசாயிருக்காது. அதை விட்டு மீனா கஷ்டப்படக்கூடாது என்று மறைச்ச விஷயத்தினால் இப்பொழுது ரொம்பவே வேதனைப்படும் அளவிற்கு சண்டை வந்துவிட்டது.

இவர்களுடைய சண்டையை குதூகலமாக விஜயா மற்றும் ரோகினி கொண்டாடப் போகிறார். இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப விஜயா ஆசைப்பட்ட மாதிரி முத்துக்கும் மீனாவுக்கும் இடையில் விரிசல் வரப்போகிறது. ஒருவேளை இதையெல்லாம் தடுக்கும் பொருட்டாக முத்துவின் நண்பர் அனைத்து உண்மைகளையும் மீனாவிடம் சொன்னால் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும்.

Also read: முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

- Advertisement -

Trending News